வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் இந்தியா வெற்றி.. புள்ளி பட்டியலில் வலிமையான இடம்.. காத்திருக்கும் சவால்

0
332
Gill

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆகியது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்கள் எடுத்து 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

- Advertisement -

கேஎல்.ராகுல் அரைசதம்

இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அதிரடியாக ஆரம்பித்த தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 7 பந்தில் இரண்டு பவுண்டரிகள் உடன் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து சாய் சுதர்ஷன் 76 பந்தில் 39 ரன்கள், கேப்டன் கில் 15 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

ஒரு முனையில் நிலைத்து விளையாடிய கே எல் ராகுல் அரை சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 108 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

- Advertisement -

புள்ளி பட்டியல் முன்னேற்றம்

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணிக்கு இது ஏழாவது போட்டியாக அமைந்தது. இந்த ஏழு போட்டிகளில் இந்திய அணி 4 போட்டிகளை வென்றும், 2 போட்டிகளை தோற்றும் ஒரு போட்டியை டிரா செய்தும் 55.56 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா மூன்று போட்டிகளில் மூன்றையும் வென்று 100 வெற்றி சதவீதத்துடனும், இலங்கை இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு ட்ராவுடன் 66.67 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் மாதிரி அந்த டீமை நினைச்சா.. இந்திய அணி பயங்கர சிக்கலில் மட்டும் – ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை

இந்திய அணி 7 போட்டிகளில் 2 மட்டுமே தோற்று இருப்பதால் வலிமையான நிலையில் இருக்கிறது. மேற்கொண்டு அடுத்து உள்நாட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரை முழுமையாக இந்திய அணி வென்றால் புள்ளி பட்டியலில் மேலே சென்று விடும்.

- Advertisement -