72 ரன்.. சூப்பர் ஸ்டாரான திலக் வர்மா.. பட்லர் போராட்டம் வீண்.. 2 விக்கெட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி.. இங்கி 2வது டி20

0
764

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நான்கு பந்துகள் மீதம் வைத்து த்ரில்லர் வெற்றியை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி20

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் சால்ட் 4 ரன் மற்றும் டக்கெட் 3 ரன் ஆகியோர் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேற, அதற்குப் பிறகு கேப்டன் ஜாஸ் பட்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் மிடில் வரிசை வீரர்கள் அதிரடியாக விளையாடச் சென்று விரைவாக நடையை கட்டினார்கள்.

இதில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 12 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 22 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பின்னர் இறுதிக்கட்டத்தில் பிரிட்டன் கார்ஸ் 17 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 31 ரன்கள் குவித்தார். இதில் கேப்டன் ஜாஸ் பட்லர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர் என 45 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

- Advertisement -

திலக் வர்மா அசத்தல் பேட்டிங்

இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இந்த முறை தொடக்க ஜோடி இந்திய அணிக்கு கை கொடுக்கவில்லை. அபிஷேக் ஷர்மா 5 ரன்னில் ஆர்ச்சரின் பந்துவீச்சில் வெளியேற, சாம்சன் 12 ரன்னில் மார்க் வுட் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் மூன்றாவது வரிசை வீரர் திலக் வர்மா ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட சூரியகுமார் யாதவ் 12 ரன், ஜூரேல் 4 ரன் மற்றும் ஹர்திக் பாண்டியா 7 ரன் ஆகியோர் வரிசையாக நடையை கட்டினார்கள்.

இதையும் படிங்க:திரும்பவும் போல்ட் ஆன ஹாரி ப்ரூக்.. கெத்தா வருண் அவர்கிட்ட இதை கேட்கலாம் – இந்திய முன்னாள் வீரர்கள் பேட்டி

அதற்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்து 19 பந்துகளில் 26 ரன்கள் குவித்து வெளியேறினார். அதற்குப் பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி கடைசி ஓவர் வரை சென்ற நிலையில் 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்து இந்திய அணி திரில்லர் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்த திலக் வர்மா 55 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 72 ரன்கள் குவித்து நாட் அவுட் ஆக திகழ்ந்தார். இதனால் இந்திய அணி நான்கு பந்துகள் மீதும் வைத்து இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது.

- Advertisement -