இன்று தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டி இன்று கட்டாக் பராபதி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. வழக்கமான இன்றைய டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் நீக்கப்பட்டு ஜிதேஷ் சர்மா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் இடம் பெற்றார்கள்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 4, அபிஷேக் ஷர்மா 17, சூரியகுமார் யாதவ் 12, திலக் வர்மா 26, அக்சர் படேல் 23, சிவம் துபே 11 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 28 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் ஷர்மா ஆட்டம் இழக்காமல் ஐந்து பந்தில் 10 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
இதை தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மிக அதிகபட்சமாக டீவால்ட் பிரிவிஸ் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து மார்க்ரம் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் தலா 14 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா வெறும் 12.3 ஓவர்களில் 74 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : 7 சேர்ந்து 112 ஸ்ட்ரைக் ரேட்.. தனி ஒருவனாக மிரட்டியாக ஹர்திக் பாண்டியா.. ஏமாற்றிய கில் சூரியகுமார் – முதல் டி20 போட்டி
இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி பும்ரா, அக்சர் படேல் நால்வரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள். ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இதில் பும்ரா இன்று தனது சர்வதேச டி20 கிரிக்கெட் நூறாவது விக்கெட் கைப்பற்றினார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட் தாண்டி கைப்பற்றிய முதல் இந்திய பவுலராக சாதனை படைத்தார்.