வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்.. புதிய இந்திய அணி அறிவிப்பு

0
21574

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில், டெஸ்ட் தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் வங்கதே டெஸ்ட் தொடரில் முழுமையாக கைப்பற்ற வேண்டும். இந்த நிலையில் ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் மும்பைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதன் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார். ரோஹித் சர்மாவுக்கு பதில் அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.புஜாரா,
விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் என நடுவரிசை வீரர்கள் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடுகிறார்கள்.

எப்போதும் போல் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார். இந்த தொடரில் இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களம் காணுகிறது. ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறாத நிலையில்  அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் என மூன்று வீரர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கான இடத்தில் உமேஷ் யாதவ் ,முஹம்மது சிராஜ், ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள தற்காலிக கேப்டன் கே. எல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் அணியாக எந்த தவறு செய்தோம் என்பதை பாடம் கற்றுக் கொண்டோம். வங்கதேச ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று இப்போது கற்றுக் கொண்டோம். ஒரு நாள் தொடரில் விளையாடிய அனுபவம் டெஸ்ட் தொடருக்கு கை கொடுக்கும். கடைசிப் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் டெஸ்ட் தொடரில் களம் இறங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -