ஐபிஎல் தொடர் முடிவு அடைந்து இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. தற்போது இதற்கான இரண்டு இந்திய அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு இந்திய அணிகளிலும் பும்ரா அக்ஸர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கியமாக வருண் சக்கரவர்த்தி ஒருநாள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
ஒருநாள் அணி
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய ஒருநாள் அணிக்கு கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தொடர்கிறார்கள். இஷான் கிஷான் மாற்று விக்கெட் கீப்பர் மற்றும் மாற்று தொடக்க ஆட்டக்காரராக இடம் பெற்றுள்ளார். எனவே ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. மேலும் பிரின்ஸ் யாதவ், ஹர்ஸ் துபே மற்றும் குர்னூர் பிரார் என மூன்று புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஷுப்மேன் கில் ( கேப்டன்), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.
டெஸ்ட் அணி
இந்த அணிக்கும் கேப்டனாக கில் தொடர்கிறார். இந்த அணியில் குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே மற்றும் மானவ் சுதார் மூவரும் அறிமுகமாகிறார்கள். மேலும் சாய் சுதர்சன் இருக்க தேவ்தத் படிக்கல் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு சொன்ன அதே பாடம்.. சிஎஸ்கேவுக்கும் இஷான் கிஷான் நடத்தி இருக்கிறார்.. வேற மாதிரியானவர் – அம்பதி ராயுடு பாராட்டு
ஷுப்மேன் கில் (சி)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
கே.எல். ராகுல்
சாய் சுதர்சன்
ரிஷப் பண்ட்
தேவ்தத் படிக்கல்
நிதீஷ் குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
மானவ் சுதார்
குர்னூர் பிரார்
ஹர்ஷ் துபே
துருவ் ஜூரல்






