உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா பின்னடைவு – இறுதிப் போட்டிக்கு முன்னேற இதைச் செய்தாக வேண்டும்

0
1705
Virat Kohli World Test Championship

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சில நிமிடங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. போட்டியின் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய ரசிகர்களின் கனவை சுக்குநூறாக்கி உள்ளது.

முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் 2021-23 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளதுஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

2021-23 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டிகளில் இதுவரை மொத்தமாக இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதர இரண்டு போட்டிகள் சமனில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் தற்பொழுது 49.07 ஆகவே உள்ளது.

புள்ளி பட்டியலில் இலங்கை அணி முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 3-வது இடத்திலும் தென்ஆப்பிரிக்கா அணி 4-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்

2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டி முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டுமானால், மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தற்பொழுது இந்திய அணி உள்ளது.

- Advertisement -

அதன்படி இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்ற ஒரு டெஸ்ட் போட்டியிலும், இந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷில் நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், பின்னர் இந்தியா மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவிருக்கின்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவிக்க வேண்டும்.

அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் மட்டுமே இந்திய அணி முதல் இரண்டு இடங்களில் லீக் தொடரை முடிக்க வாய்ப்பு உள்ளது. முதல் இரண்டு இடங்களில் இந்திய அணி லீக் தொடரை முடித்தால் மட்டுமே, 2021-23 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கடந்த ஆண்டு போல இடம்பெற்ற விளையாட முடியும்.

இந்திய அணி மேற்கூறியபடி இனி வரும் அனைத்துப் டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றது போலவே இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் தகுதி பெற வேண்டும் என்பதே அனைத்து இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.