உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தானுக்கு கீழ் சென்றது இந்திய அணி – அபராதம் விதித்தது ஐசிசி

0
113
Virat Kohli and Pakistan test team

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணியோடு பர்மிங்காம் நகரின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டியில், தனது இத்தனை ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவிற்கான மிக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. இது தற்போது இந்திய கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் உருவாக்கி இருக்கிறது!

மேலும் தற்போது விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டி கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கோவிட் காரணத்தைக் காட்டி விளையாட தவிர்த்த டெஸ்ட் போட்டியாகும். அப்பொழுது ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காகத்தான் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் செல்கிறது இந்திய அணி என்ற கடுமையான விமர்சனங்கள் கிளம்பி இருந்தது. தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் 378 ரன்கள் டார்கெட் வைத்தும், டிபென்ட் செய்ய முடியாது தோற்றுப் போனதால், பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளான இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் இதைக் குறிப்பிட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக, இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் இரசிகர்களைக் கடுப்பேற்றும் விதமாக வேறொரு சம்பவமும் நடந்தேறி உள்ளது. என்ன சம்பவம் என்றால்; குறித்த நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால், இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டு, போட்டிக் கட்டணத்தில் 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இடத்தை இழந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சிறிய வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி மூன்றாவது வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 52.08. பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவிகிதம் 52.38.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க பாகிஸ்தானிற்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தது ஆஸ்திரேலிய அணி. இதில் மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரில் 1-0 என ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் அணி தோற்றிருந்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி அடுத்து இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் வாளையாடுவதற்காக இலங்கை நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் வெற்றி பாகிஸ்தான் அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான தொடராக அமைகிறது. தற்போது இதற்காகப் பாகிஸ்தான் அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது!