“இந்தியா தோத்துடுச்சு.. ஆனா அதுக்கு அடுத்து நடந்த இந்த விஷயம் வேற லெவல்..!” – அக்தர் பேச்சு!

0
26329
Akthar

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்திய அணி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு என ஒட்டு மொத்த நாட்டிற்கும் பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

ஆனால் இறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக இந்திய அணி தோற்று உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணியிடம் இழந்தது. இதன் காரணமாக அந்த தோல்வியை இந்திய தரப்பில் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

- Advertisement -

மேலும் இதுபோன்ற ஒரு உலகக் கோப்பை இந்திய அணி இதுநாள் வரையில் அமைந்ததில்லை. மேலும் இப்படியான அணி அடுத்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிடைக்குமா என்றும் தெரியாது. இது மட்டும் இல்லாமல் உலகக் கோப்பைத் தொடர் இந்திய மண்ணில் நடந்தது.

இத்தனை விஷயங்கள் இருந்தும் கோப்பையை தவறவிட்டதைதான் இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அணியின் தோல்வியில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடிய இடத்தில் ஆடுகளம்தான் இருக்கிறது.

- Advertisement -

இந்த ஆடுகளத்தை தேர்வு செய்துவிட்ட பொழுதே, டாஸ் வெல்பவர்கள் ஆட்டத்தை வெல்வார்கள் என்கின்ற நிலை வந்துவிட்டது. ஆனால் இது குறித்து சிலர் மட்டுமே பேச பலர் மௌனம் காக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி குறித்து பேசி உள்ள சோயப் அக்தர் கூறும் பொழுது “ரோகித் சர்மா வீரராகவும், கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். கடைசி நாளில் மட்டுமே அவர் தந்திரத்தை கைவிட்டார். இல்லையெனில் அவர் உலகக் கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியானவர். அவரால் ஏன் இன்னும் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்று நான் இப்பொழுதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர் உலகக் கோப்பை முழுவதும் சரியான இன்டெண்ட் கொண்டிருந்தார். தனிப்பட்ட மைல்கற்கள் பற்றி அவர் நினைக்கவில்லை. மாறாக அவர் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்லவே விரும்பினார். நான் அவரை உண்மையாக உணர்கிறேன்.

இதேபோல் நான் இந்திய பிரதமரின் செயலை பாராட்டுகிறேன். அவர் வீரர்களுடன் இருப்பதாக செய்தியை கொடுத்தார். இது ஒரு தேசமாக இந்திய அணியுடன் இந்தியா நிற்கிறது என்பதற்கான செய்தி. மேலும் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் என்று அவர்களிடம் கூறி அவர்கள் மன நம்பிக்கையை அதிகப்படுத்தினார். இதை நான் மிகவும் பாராட்டுகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -