இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மூன்றாவது நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் பண்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டி செய்த நியூசிலாந்து அணிக்கு ஹென்றி நிக்கோலஸ் மற்றும் பிலிப்ஸ் இருவரும் சதம் அடிக்க, அந்த அணி 368 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த படிக்கல் அரைசதம் அடித்து 80 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் கேஎல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 136 ரன்கள் குவித்தார்.
இன்னொரு பக்கத்தில் கேப்டன் கில் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டு கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். துணை கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 55 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 486 ரன்கள் குவித்து 118 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இந்த போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் இந்தியா மேற்கொண்டு 200 ரன்கள் சேர்த்து நியூசிலாந்தை ஆடவைத்தால் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.