இந்திய கிரிக்கெட்

284 ரன்.. தனியாளாய் போராடிய கேஎல் ராகுல் ஸ்பெஷல் சாதனை.. கில் நம்பிக்கை பலிக்குமா? சுதாரித்த இந்திய அணி

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேஎல்.ராகுலின் பொறுப்பான சதத்தின் காரணமாக சரிவிலிருந்து மீண்டு எழு விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்து இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்து விஜய் தேர்வு செய்தது. மேலும் டாஸ் நிகழ்வின்போது இரவில் பனிப்பொழிவு வருவதில்லை என இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறியிருந்தார்.

விக்கெட் சரிவு

இந்த போட்டி நடைபெறும் ராஜ்கோட் மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதே வரலாறாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் பவர் பிளேவைத் தாண்டி 70 ரன்கள் மேல் எடுத்திருந்தது. ஆனால் இதற்கு அடுத்து இந்தி அணி அடுத்தடுத்து முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியில் ரோகித் சர்மா 38 பந்தில் 24 ரன்கள், கில் 53 பந்தில் 56 ரன்கள், விராட் கோலி 29 பந்தில் 23 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 17 பந்தில் 8 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது. இதற்கு அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 44 பந்தில் 27 ரன்கள், நிதீஷ் குமார் ரெட்டி 21 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

கேஎல்.ராகுல் சாதனை

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கேஎல் ராகுல் ஆரம்பத்தில் பொறுமை காட்டி பொறுப்புடன் விளையாடினார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியை ஆரம்பித்து அரை சதத்தை கடந்தார். இதற்கடுத்து சிறப்பாக விளையாடிய அவர் 87 பந்துகளில் சதம் அடித்தார். இறுதிவரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 92 பந்தில் 112 ரன்கள் குவித்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் கிறிஸ்ட்டன் கிளார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க: ஐசிசி ரேங்க்.. 57 மாதங்கள்.. விராட் கோலி எட்டிய புதிய உச்சம்.. ரோஹித் சர்மா சிறிய சரிவு.. இந்திய வீரர்கள் ஆதிக்கம்

மேலும் 2025 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் 40 முதல் 50 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்தவராக கேஎல்.ராகுல் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 283 ரன்கள் எடுத்திருக்கிறார். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் கிளன் பிலிப்ஸ் 157 ஸ்ட்ரைக் ரேட்டில் 244 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: KL Rahul

Recent Posts