இன்று ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது.
ஜப்பானில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடுகளம் அதிகபட்சமாக சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் தாண்டி குவித்தது ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூரியவன்சி 9 பந்துகளில் 15 ரன்கள், அபிஷேக் ஷர்மா அற்புதமாக விளையாடி 28 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து வந்த சாம்சன் 4 பந்துகளில் 2 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 21 ரன்கள், இஷான் கிஷான் 18 பந்துகளில் 20 ரன்கள், சிவம் துபே 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்கள்.
இன்னொரு முனையில் இறுதி கட்டத்தில் களத்திற்கு வந்து அதிரடி காட்டிய திலக் வர்மா அற்புதமாக விளையாடி 22 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் அசத்தினார். இவரது கடைசி நேர அதிரடியின் காரணமாக இந்தியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது.
மேலும் இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் எடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு இறுதிப் போட்டியில் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் தந்த அதிரடி பேட்டிங் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.