இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி போட்டியை இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார்கள்.
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் நியூசிலாந்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய அந்த அணி 368 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு ஹென்றி நிக்கோலஸ் 175, கிளன் பிலிப்ஸ் 118 ரன்கள் எடுத்தார்கள்.
இந்திய அணியின் தரப்பில் பும்ரா 4, ஆகாஷ் தீப் 3 அன்சூல் காம்போஜ் 2 மற்றும் ரசித் கிருஷ்ணா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 89 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சதத்தை தவறவிட்டார். அவரிடம் இணைந்து விளையாடிய கேஎல்.ராகுல் 52, படிக்கல் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 130 ரன்கள் கிடைத்தது. இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியிருந்த நிலையில், ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்ட காரணத்தினால் இந்தியா பக்கம் போட்டி திரும்பி இருக்கிறது. நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்தால் நியூசிலாந்து அணிக்கு அழுத்தத்தை உருவாக்க முடியும்.