இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்தியாவின் உத்தேச அணி

0
2604
Devdutt Padikkal and Varun

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது இந்நிலையில் 20 தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தின் விளையாடி வரும் சூரிய குமார் யாதவ் மற்றும் பிரித்திவி ஷா இருவரும் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி விளையாட சென்றிருக்கிறார்கள் . இதனால் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் யார் யார் விளையாடுவார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் இந்திய அணியின் உத்தேசமான பிளேயிங் லெவன்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர்கள் : ஷிகர் தவான் & தேவ்தத் படிக்கல்

தொடக்க வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவானுடன் களமிறங்குகிறார் அறிமுக ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் . ஒருநாள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக விளையாட வில்லை உலகக் கோப்பை நெருங்கி கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஷிகர் தவன் . ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பிரித்திவி ஷா இல்லாத இடத்தை தேவ்தட் படிக்கல் மிக சிறப்பாக பூர்த்தி செய்வார் . இவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை வாய்ப்பு இவரை சற்று ஏற்றி பார்க்கும்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் : மணீஷ் பாண்டே , இஷான் கிஷன் , சஞ்சு சாம்சன்

Young Team India

மனிஷ் பாண்டே சில வருடங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையை ஒத்திக்கு வாங்கியுள்ளார் என்றே கூறவேண்டும் அவ்வளவு தான் பா இந்த மேட்ச் சோடா இவருக்கு டீம்ல இடமிருக்காது அப்படின்னு சொல்ற போதெல்லாம் ஏதோ ஒரு அதிர்ஷ்டம் அவருக்கு அடிக்க மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கிறது அதை அதிர்ஷ்டம் தான் தற்போது டி20 போட்டியிலும் நடைபெற்றிருக்கிறது சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணி விளையாட செல்ல இருப்பதால் அவருக்கு பதில் மணிஷ் பாண்டே விளையாட உள்ளார்.

முதலாவது டி20 போட்டியில் அரைசதம் முதலாவது ஒரு நாள் போட்டியில் அரைசதம் என தனது அறிமுக ஆட்டங்களில் பட்டையை கிளப்பும் இஷான் கிஷன் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் உலகக்கோப்பை அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக அவர் தேர்வு செய்யப்படுவார்.

- Advertisement -

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சர்வதேச போட்டிகளில் சொதப்பி மீண்டும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் சொதப்பி என்று சுழற்சி முறையில் சுற்றிக்கொண்டே இருக்கும் சஞ்சு சாம்சன் தனது முதலாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதைப்போன்று டி20 தொடரிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு உலக கோப்பைக்கான பட்டியலில் நிச்சயம் இடம் கிடைக்கும்.

ஆல்ரவுண்டர்ஸ் : ஹர்டிக் பாண்டியா & குர்னால் பாண்டியா

ஒருநாள் தொடரில் எதிர்பார்த்த அளவில் செயல்படாமல் இருந்தாலும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் என்ற பெயரை வாங்கியுள்ள ஹர்டிக் பண்டியா இத்தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கட்டத்தில் உள்ள அவருடைய ஆல்ரவுண்டர் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக தேவையாக உள்ளது இந்த சமயத்தில்.

இந்திய அணி ஜடேஜாவிற்க்கு போட்டியாக வளர்ந்து வரும் குர்ணால் பாண்டியா இத்தொடரில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிரந்தரமான அணியில் ஒரு அங்கமாக அவர் இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பந்துவீச்சாளர்கள் : புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி , தீபக் சஹார் , யுஹேந்திர சஹல்

தொடக்க பந்துவீச்சாளர்கள் ஆக புவனேஸ்வர் குமார் மற்றும் தீபக்சேகர் இந்த இருவரும் ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள் இந்திய அணி தொடரை வென்ற தற்கு மிக முக்கியமான காரணம் இவர்கள்தான் ஏனெனில் இவர்கள் அமைத்துக் கொடுத்த பாட்னர்ஷிப்பில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒருவேளை அது தவறிருந்தால் இன்று இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்து இருக்கும். ஒரு நாள் தொடரை போலவே டி20 போட்டிகளில் இவர்களது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இந்திய அணிக்கு மிகப் பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போதைய இந்திய அணியின் முன்னணி வீரர் என்றழைக்கப்படும் யுஹேந்திர சஹல் முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவரது அனுபவம் மற்றும் பங்களிப்பு டி20 போட்டியிலும் இருப்பினும் நிச்சயம் டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெறும். இத்தொடரின் மற்றொரு அறிமுக வீரராக வருன் சக்கரவர்த்தி களமிறங்கியிருக்கிறார்.அவருடைய மாயாஜால பந்துவீச்சு நிச்சயம் இலங்கை அணிக்கு பெரிய தொந்தரவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.