நடப்பு ஆசியக்கோப்பைத் தொடர் முழுமையாகப் பாகிஸ்தானில் நடைபெறாமல் போனது, பாகிஸ்தான் நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்திருக்கிறது!
இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்லக்கூடாது என்று இந்திய அரசு மறுத்த பின்னால், ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை என இரு நாடுகளில் நடத்தபாகிஸ்தானை சமரசம் செய்தது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முயற்சி தற்பொழுது பெரிய பின்னடைவுகளை தொடரில் கொண்டு வந்திருக்கிறது. இலங்கையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இரண்டாவது சுற்று போட்டிகள் ஆசிய கோப்பையில் நடைபெறுமா? என்பது பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்த நிலையில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே என ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. ஆனால் மற்ற நாடுகளுக்கு இது கிடையாது. எப்படியாவது இந்தியா பாகிஸ்தான் போட்டியை முழுமையாக நடத்தி, வித்யா பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தப்பித்துக் கொள்ளவே இப்படி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்திருப்பது தொடர்பாக, பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாக நேற்று முன் வைத்திருந்தார்கள்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் இந்த ஓரவஞ்சனையான செயல், அதிகாரம் மற்றும் பணம் இருக்கிறது என்கின்ற காரணத்தினால் நடைபெறுகிற ஒன்று, மற்ற அணிகளின் முடிவுகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் போக்கு நியாயமற்றது என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் “இது உண்மையாக இருந்தால், இது வெட்கமற்றது. தொடரை நடத்தும் அமைப்பாளர்கள் நம்மை கேலி செய்திருக்கிறார்கள். மற்ற இரண்டு அணிகளுக்கும் வித்தியாசமான விதிகள் கொண்ட போட்டியை நடத்துவது நெறிமுறை அற்றது.
மழை பெய்தால் முதல் நாளோடு போட்டி கைவிடப்படுவதுதான் நீதியின் பெயரால் நியாயமானது. இரண்டாவது நாளிலும் மழை பெய்யட்டும், இந்தத் தீங்கான திட்டங்கள் வெற்றியடையாமல் போகட்டும்!” என்று மிகக் கடுமையாகச் சாடி இருக்கிறார்!






