2வது போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா; இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம்! முதல் போட்டியின் ஹீரோ வெளியே..

0
117

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஹராரே மைதானத்தில் நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் இந்திய அணி ஒரு மிகப்பெரிய மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் அசத்தலாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், ஆட்டநாயகன் விருதையும் பெற்ற தீபக் சஹர் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஷ்ரதுல் தாக்கூர் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார். ஜிம்பாவே அணி இரண்டு மாற்றங்களுடன் களம் இறங்குகிறது. கைட்டானோ மற்றும் சிவ்வகா ஆகிய இரண்டு வீரர்களும் உள்ளே எடுத்து வரப்பட்டிருக்கின்றனர்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் வீரர்களின் விவரம்

இந்திய அணி

- Advertisement -

ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல்(கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன்(கீப்பர்), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

ஜிம்பாப்வே அணி

இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா(கீப்பர் மற்றும் கேப்டன்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா.

இது குறித்து கேப்டன் கே எல் ராகுல் கூறுகையில், “இன்றைய போட்டியில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். மைதானம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அதேநேரம் சென்ற போட்டியை விட சற்று கடினமானதாகவும் இருக்கிறது. ஆகையால் துவக்கத்தில் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும். சென்ற போட்டியில் கடைசியில் வந்த வீரர்கள் நன்றாக விளையாடியதை பார்த்தோம். ஆகையால் முதல் சில ஓவர்களிலேயே கனிசமான விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே ஆட்டம் கையில் இருக்கும். இன்றைய போட்டியில் தீபக் சஹர் வெளியில் இருக்கிறார். தாக்கூர் உள்ளே வந்திருக்கிறார். இந்த மாற்றத்தை செய்ய விரும்பினோம்.” என பேட்டியளித்தார்.