3வது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் 2 மாற்றங்கள் அறிவிப்பு – வரலாறு படைக்க முனைப்பு

0
2345
Virat Kohli and Mohammad Siraj

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணியும் வெற்றி பெற்று 1-1 என்கிற கணக்கில் இரு அணிகளும் தற்பொழுது சம நிலையில் இருக்கின்றன.

மீதமுள்ள கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. கடைசி மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற ஏக்கத்தில் தற்போது அனைத்து இந்திய ரசிகர்களும் உள்ளனர். அப்படி இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றால், தென்னாப்பிரிக்க மண்ணிலேயே இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்யவிருக்கும் இரண்டு மாற்றங்கள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியால் சிறிய தசை பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் போனது. அதன் காரணமாக கேஎல் ராகுல் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி விளையாடினார். அவரது இடத்தில் ஹனும விஹாரி 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடினார்.

தற்போது விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதால், மீண்டும் விராட் கோலி இந்திய அணியில் இடம் பெற்று இந்திய அணியை வழிநடத்தி விளையாடப் போகிறார். ஹனும விஹாரிக்கு பதிலாக முன்பு போல விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட போகிறார்.

மற்றும் ஒரு மாற்றமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க போவதாக தற்போது தகவல் உறுதியாகியுள்ளது. முகமது சிராஜிக்கு பதிலாக அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகிறார் என்கிற செய்தியும் தற்போது தெரியவந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிக அனுபவம் உள்ள இஷாந்த் ஷர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாற்றங்களுடன் இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி போராட போகிறது.

- Advertisement -

கேப் டவுனில் வரலாறு படைக்குமா இந்தியா அணி

1993 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கேப் டவுனில் விளையாடப்பட்டுள்ளன. அந்த ஐந்து டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டிகள் சமனில் முடிவடைந்தது. மீதமுள்ள மூன்று போட்டிகளில் தென்ஆப்ரிக்க அணியே வெற்றி பெற்றது.

இதுவரை கேப் டவுனில் வெற்றியை ருசி பார்க்காத இந்திய அணி இந்த முறை 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, அதே சமயத்தில் தொடரையும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்குமா என்கிற ஏக்கத்தில் தற்போது அனைத்து இந்திய ரசிகர்களும் நாளை நடைபெறவிருக்கும் 3ஆவது டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.