“இந்தியா டிஆர்எஸ் முறையில் ஏமாற்றுகிறது.. நிச்சயம் விசாரணை தேவை!” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் மீண்டும் குற்றச்சாட்டு!

0
3122
Bcci

நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் 243 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றி பெற்று, லீக் சுற்றின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை நிரந்தரமாக தக்க வைத்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் 326 ரன்கள் குவித்தது. விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை நிரந்தரமாக பிடித்தது.

நேற்றைய போட்டியில் ஜடேஜா பந்துவீச்சில் வான்டர் டேசன் எல்பி டபிள்யு முறையில் விக்கெட்டை இழந்தார். அது மூன்றாவது நடுவரிடம் ரிவ்யூ போய் வந்தது. ஆனால் அது அவுட் கிடையாது, பிசிசிஐ டிஆர்எஸ் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வைத்திருக்கிறது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராஸா குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதுகுறித்து நேற்று பாகிஸ்தானின் ஒரு உள்நாட்டு சேனலில் பேசும் பொழுது “இன்று ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் எடுத்தார் இது அவருடைய கேரியர் பெஸ்ட். அவர் ஒரு இடது கை சுழற்பது வீச்சாளர். அவர் வான்டர் டெசனுக்கு லெக் ஸ்டெம்பில் வீசிய பந்து எப்படி மிடில் ஸ்டெம்புக்கு திரும்பும்? பந்து விழுந்த கோணத்தில் இருந்து அப்படியே வெளியில்தான் செல்ல வேண்டும்.

- Advertisement -

டிஆர்எஸ் வைத்து முறைகேடு நடப்பதால் இதை நிச்சயம் விசாரணை செய்ய வேண்டும். இதற்கு முன்பும் இப்படி எல்லாம் நடந்திருக்கிறது. அதே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு கடைசியில் ஒரு விக்கெட்டை தரவில்லை. அது குறித்து ஒரு மன்னிப்பு கூட வரவில்லை. அவர்கள் தங்களுடைய உள்நாட்டில் நடப்பதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒளிபரப்பாளர்கள் உதவியுடன் பிசிசிஐ டிஆர்எஸ் முறையை பயன்படுத்திக் கொள்கிறது. இதேதான் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சயித் அஜ்மல் பந்தில் சச்சினுக்கு நடந்தது. உள்நாட்டில் நடக்கும் உலக கோப்பையில் மட்டும் இந்திய அணி எப்படி இவ்வளவு தரமாக விளையாடுகிறது? டீம் இந்தியாவுக்கு எதிராக மற்ற அணிகள் எப்படி இவ்வளவு மோசமாக விளையாடுகின்றன?” என்று குற்றச்சாட்டுகள் வைத்து கேள்விகள் கேட்டிருக்கிறார்!