தினேஷ் கார்த்திக் கதவை தட்டவில்லை, உடைத்திருக்கிறார் ! கம்பேக் குறித்து ராகுல் டிராவிட் புகழாரம்

0
313
Rahul Dravid about Dinesh Karthik

உலக கிரிக்கெட்டில் இன்று இந்திய கிரிக்கெட் குறித்த செய்திகளே மிகப் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த வகையில் இன்றைய தேதியில் பலரால் பேசப்படும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக, மூத்த வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தன் சிறப்பான பேட்டிங்கால் பலரால் பேசப்படும் ஒரு வீரராக மாறியிருக்கிறார்!

ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து பின்பு பதவி பறிக்கப்பட்டு வீரராகத் தொடர்ந்து, அடுத்து ஏலத்தில் கொல்கத்தா அணியால் கழட்டியும் விடப்பட்டார் தினேஷ் கார்த்திக். ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் வாங்க எல்லாமே தலைகீழாக மாறத் தொடங்கியது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்காக பினிசிங் ரோலில் டெத் ஓவர்களில் களமிறங்கிய அவரின் ஆட்டம் வேறொரு உயரத்தில் இருந்தது. மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் பெங்களூர் அணிக்காக 330 ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட்டோ 183. பெங்களூர் அணி ப்ளேஆப்ஸ் வாய்ப்பில் நுழைய இவரின் பேட்டிங்கே பெரியளவில் காரணமாக இருந்தது.

இதற்கடுத்து தென் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்புப் பெற்று, நான்காவது டி20 போட்டியில் 27 பந்தில் 55 ரன்களை விளாசி அசத்தினார். தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான செயல்பாடுகள் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “அவர் ஒரு குறிப்பிட்ட திறமைக்காகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். அவர் தேர்வு சரியானதென நிரூபிக்கப்பட்டதில் மகிழ்ச்சி” என கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ராஜ்கோட்டில் எல்லாம் கைக்கூடி வந்தது. அப்பொழுது எங்களுக்குச் சரியான ஸ்கோரை நிர்ணயிக்க ஒரு சிறப்பான இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அந்த வேலையை கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அழகாகச் செய்தார்கள். இருவரும் டெத் ஓவர்களின் ஸ்பெசல் பிளேயர்கள். அவர்களின் இந்த திறமை உலகில் யாரையும் விட சிறந்தது” என்று கூறினார்.

தினேஷ் கார்த்திக் மேலும் மேலும் வாய்ப்பு பெறுவது பற்றிக் கூறிய டிராவிட் “கார்த்திக் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் முன்னோக்கிச் செல்வதற்கான பாதைகளை இது திறக்கிறது. நான் வீரர்களிடம், வாய்ப்புக்காகக் கதவைத் தட்டாதிர்கள் உடையுங்கள் என்று சொல்வேன். கார்த்திக் கதவை உடைத்திருக்கிறார். ராஜ்கோட்டில் அவரது இன்னிங்ஸ் அப்படித்தான் இருந்தது” என்றார்!