அடுத்த போட்டியில் ஜெயிக்க வேண்டுமென்றால் இந்த இருவருக்கும் வாய்ப்பு கொடுங்கள் – சுனில் கவாஸ்கர் கருத்து

0
123
Sunil Gavaskar about Ind vs Nz T20WC

அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டு தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் பெரும்பான்மையான வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி என்னதான் அரை சதம் அடித்தாலும் குறைவான டார்கெட் என்பதால் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றது. அதுவும் இந்திய அணியால் ஒரு விக்கெட் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிராக எடுக்க முடியவில்லை. இதுவரை ஒருமுறை கூட இந்திய அணியுடன் உலக கோப்பை தொடரில் தோல்வி பெறாத பாகிஸ்தான் அணி இந்த முறை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்பிறகு அணியை இந்திய அணி கேப்டன் கோலி மாற்றியமைக்க வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வந்தனர். தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் துவக்க வீரர் சுனில் கவாஸ்கர் அணி தேர்வில் மாற்றம் வேண்டும் என்று கூறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணி 2 வீரர்களை மாற்றவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் பேசும் பொழுது ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக இஷான் கிஷனையும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரையும் இந்திய அணி பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா பந்துவீச வில்லை என்றால் அணியின் சமநிலை தவறுகிறது என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கடந்த போட்டியில் 8 பந்துகள் பிடித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்த பாண்டியாவால் எந்த ஒரு பந்தையும் சரியாக கணித்து ஆட முடியவில்லை. அதேபோல புவனேஸ்வர் குமார் 3 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார்.

இதனால் இவர்களுக்கு பதிலாக பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இஷன் கிஷனையும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு பங்கேற்று சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூரையும் இணைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்திய அணி ஷர்துல் தாகூர் மற்றும் இஷான் கிஷனை இந்திய அணியில் இணைத்து வித்தியாசமான அணுகு முறையில் நியூசிலாந்தை சந்திக்குமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.