“இந்தியாவுக்கு பயமே தேவையில்ல.. ஸ்பெஷல் 5 இருக்கு!” – அடித்து சொல்லும் நாசர் ஹுசைன்!

0
3322
ICT

மும்பை வான்கடே மைதானம் நாளை பெரிய கிரிக்கெட் திருவிழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன.

நேற்று ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய பயிற்சி குழுவினர் மும்பை ஆடுகளத்தை பார்வையிட்டுஆராய்ச்சி செய்தனர். இரு தரப்பும் போட்டியை எதிர் கொள்வதற்கு முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை சிறிய மைதானம் மற்றும் இரவில் பனிப்பொழிவு என்பதால் எப்படியும் ரன் மழை இங்கு கட்டாயம் உண்டு. அதே சமயத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது முதல் 20 ஓவர்கள் விளையாடுவதற்கு கடினம். எனவே போட்டியில் இரண்டு பக்கத்திலுமே சாதக பாதகங்கள் உண்டு.

இப்படியான காரணங்களினால் மும்பையில் நடைபெறும் போட்டி தனிப்பட்ட முறையில் சுவாரசியமானதாக மாறுகிறது. இந்திய அணி இலங்கைக்கு எதிராக இந்த உலகக் கோப்பையில் இங்கு விளையாடி முதலில் பெரிய ரன்கள் எடுத்து, அடுத்து பந்து வீச்சுக்கு சாதகமான முதல் 20 ஓவர்களில் இலங்கையை 55 ரன்களுக்கு சுருட்டினார்கள்.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணையின் பெரிய பலமாக ஐந்து பந்துவீச்சாளர்களைக் கொண்ட பந்துவீச்சு யூனிட்தான் இருக்கிறது. இந்திய பந்துவீச்சு யூனிட் இந்தியா பேட்டிங் யூனிட்டை விட வலிமையாக இருப்பது, இந்திய அணிக்கு பெரிய சாதகத்தை கொண்டு வருகிறது.

இதுகுறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது “நான் பார்த்ததிலேயே சிறந்த பந்துவீச்சு யூனிட் தற்பொழுது இந்தியாவிற்கு இருக்கும் பந்துவீச்சு யூனிட்தான். இந்தியாவில் காலப்போக்கில் சிறந்த பந்துவீச்சாளர்கள் வந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் ஒரு யூனிட்டாக இதுதான் சிறந்தது.

பும்ரா விக்கெட்டை எடுக்கவில்லை என்றால் சிராஜ் செய்வார். சிராஜ் எடுக்கவில்லை என்றால் சமி செய்வார். இவர்கள் மூவருமே செய்யவில்லை என்றால் அடுத்து வரக்கூடிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் செய்வார்கள். நீங்கள் எப்படியுமே இவர்களுக்கு விக்கெட்டை கொடுத்தாக வேண்டும்.

முன்பு சச்சின் சேவாக் கங்குலி ராகுல் டிராவிட் லட்சுமணன் என ஐந்து சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்த யூனிட் இருந்தது. தற்பொழுது அதேபோல பந்துவீச்சில் ஐந்து சிறந்த பந்துவீச்சாளர்கள் கொண்ட பந்துவீச்சு யூனிட் இருக்கிறது. எனவே இந்திய அணி பலமாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -