நடப்பு உலக கோப்பையில் இந்திய அணியின் எழுச்சி அபாரமான முறையில் அமைந்திருக்கிறது. அவர்கள் நெதர்லாந்து அணியை தவிர இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளையும் தற்போது வென்று இருக்கிறார்கள்.
இந்திய அணி தான் விளையாடிய 8 லீக் போட்டிகளில் 8 போட்டிகளையும் வென்று இருக்கிறது. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசி லீக் போட்டி இருக்கிறது.
இந்திய அணி அரையிறுதியில் தான் ஏற்கனவே லீக் சுற்றில் தோற்கடித்த ஏதாவது ஒரு அணிக்கு எதிராகத்தான் விளையாட வேண்டியது வரும். இந்திய அணி அறையிறுதியில் நியூசிலாந்து அணி வாய்ப்பு கொஞ்சம் அதிகம். அடுத்த இடத்தில் பாகிஸ்தான் அணி இருக்கிறது.
நேற்று தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி கொல்கத்தா மைதானத்தில் மோதிய போட்டி நடப்பு உலக கோப்பை தொடரில் முக்கியமான போட்டியாக கடைசிக் கட்டத்தில் மாறி இருந்தது.
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் போட்டி இரு பக்கமும் இல்லை. இந்தியாவின் பக்கம் ஒரு தலைப்பட்சமாகவே போட்டி முடிந்தது. 326 ரன்கள் குவித்த இந்திய அணி 83 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டி வீசிவிட்டது.
இப்படி தொடர்ந்து லீக் போட்டிகளில் வெற்றி மேல் வெற்றியாக குவித்து வரும் இந்திய அணி நாக் அவுட் சுற்றில் எப்படி செயல்படும் என்கின்ற எதிர்பார்ப்பும் ஒரு பயமும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கிறது என்பது உண்மை.
இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறும்பொழுது “ஒரு விஷயம் நல்லது தற்பொழுது இது குரூப் ஸ்டேஜ். ஆனால் நாக் அவுட் நிலைக்கு செல்லும் பொழுது நிலைமைகள் மாறும். ஒரு அணி சிறப்பாக விளையாடி நாக் அவுட் செல்லும் பொழுது அங்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.
எனவே இதுவே ஒரு குறிப்பிட்ட அணிக்கு அழுத்தமாக மாறும். ஏதாவது ஒரு அணி நாக் அவுட் சுற்றில் ஒன்று இரண்டு ஓவர்கள் சிறப்பாக செயல்பட்டால், அந்த இடத்தில் இந்திய அணிக்கு பெரிய சரிவு உண்டாகும். இதன் காரணமாக உலகக் கோப்பையை வெல்ல மற்ற அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி யாருக்கு கடினமான நேரத்தை உருவாக்கப் போகிறது என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
இந்தியாவை வெல்ல வேண்டுமென்றால் நீங்கள் இந்திய அணிக்கு எதிராக தோற்ற ஞாபகத்தில் இருந்து மனதளவில் வெளியே வர வேண்டும். இதுவரை அவர்களுடன் விளையாடிய அணிகளை எல்லோரையும் வென்று ஏற்கனவே அவர்கள் 50 சதவீத வெற்றியை பெற்று விட்டார்கள். எனவே மனதளவில் இதை முறியடித்து வெளியே வந்தால் மட்டுமே இந்தியாவை வெல்ல முடியும்!” என்று கூறியிருக்கிறார்!






