5வது நாள்.. இந்தியாவின் வெற்றிக்கு குறுக்கே நிற்கும் மழை.. போட்டியை வெல்ல முடியுமா?.. வானிலை அறிக்கை

0
386
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்த செய்தி இந்திய ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.

தற்போது இங்கிலாந்து அணியின் கையில் 7 விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 536 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வெல்ல முடியாது என்கின்ற சூழ்நிலையை இந்திய அணி உருவாக்கி விட்டது. ஆனால் கடைசி நாளில் மழைக்கான வாய்ப்புகள் இந்திய அணியும் வெற்றி பெற விடுமா? என்கின்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

- Advertisement -

தாமதமான டிக்ளர்

நேற்று இந்திய அணி கடைசி செஷனில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, ஐந்தாவது நாளில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் கூறப்பட்டது. மேலும் ஆடுகளமும் பேட்டிங் செய்ய சாதகமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி டிக்ளர் செய்யாமல் தொடர்ந்து பேட்டிங் செய்தது.

மிகக்குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு 550 ரன்கள் இலக்கு சரியானதாக இருந்திருக்கும். ஆனால் இந்திய அணி இன்னும் கூடுதலாக சென்று 608 ரன்கள் இலக்காக கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக 20 ஓவருக்கு மேல் வீச வேண்டிய இந்திய அணி 16 ஓவர்கள் மட்டும் வீசியது. ஆனாலும் பாராட்டும்படி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி விட்டது.

- Advertisement -

மழை வாய்ப்பு எவ்வளவு?

இந்த போட்டி நடைபெறும் இடத்தில் அதிகாலையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிறைய காணப்படுகிறது. அதுவே அங்கிருந்து மதியம் 1:30 மணி வரையில் மழை வாய்ப்பு 22 சதவீதமாக குறைகிறது. இந்த நிலையில் போட்டியின் முதல் செஷன் மழையால் பாதிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் காணப்படுகிறது. இந்த முதல் செஷன் முழுவதுமாக கைவிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 607 ரன்.. கில் தனி வீரராக உலக சாதனை.. கம்பீர் டிக்ளர் முடிவு.. ரசிகர்கள் விமர்சனம்.. வெல்ல முடியுமா?

அதே சமயத்தில் மற்ற இரண்டு செஷன் போட்டி நடைபெறும் நேரத்தில் வானம் முழுவதுமாக மேகமூட்டமாகவே இருக்கும், வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழே வந்து விடும் என்றும், இது இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய உதவியை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓவர்கள் குறைந்தால் கூட இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -