இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 10 வருடங்களுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தோல்வியடைந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணி ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 185 ரன்கள் எடுக்க, அதற்குப் பிறகு முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதற்குப் பிறகு போட்டியின் பாதியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா காயம் காரணமாக பாதியில் வெளியேற, அழுத்ததிற்கு உள்ளான இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 157 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த சூழ்நிலையில் பும்ரா இல்லாததால் போராடிய இந்திய வீரர்கள் நான்கு விக்கெட் வீழ்த்திய போதிலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆஸ்திரேலியா 162 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பும்ரா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “சிறிய விரக்தி உள்ளது, ஆனால் உங்கள் உடலை மதிக்க வேண்டும் உங்கள் உடலோடு தொடர்ந்து போராட முடியாது. தோல்வி ஏமாற்றமாக உள்ளது. தொடரின் முக்கிய விக்கட்டை பெற தவறியதே முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். முதல் இன்னிங்சின் இரண்டாவது ஸ்பெல்லின் போது எனக்கு சில அசவுகரியம் ஏற்பட்டது. ஆனால் எங்கள் மற்ற பந்துவீச்சாளர்கள் முன்னேறினார்கள். தொடரில் ஒருவர்வெளியேறினால் மற்றவர்கள் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இன்று காலை நிச்சயம் போராட்டக் குணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற விவாதித்தோம்.
இதையும் படிங்க:162 ரன்ஸ்.. காயத்திலும் பும்ரா செய்த நெகிழ்ச்சி செயல்.. கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா.. முடிந்த இந்திய அணியின் WTC பைனல் வாய்ப்பு
நாங்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளியேறவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்பது இப்படித்தான் செல்கிறது. அடுத்ததை உருவாக்குவது, உள்வாங்குவது போராட்ட குணத்தை வெளிப்படுத்துவது, சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது என்று அனைத்துமே முக்கியம். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது முக்கியம். இந்த கற்றல் எங்களுக்கு எதிர்காலத்தில் உதவும். எங்கள் இளம் வீரர்கள் நிறைய அனுபவங்களை பெறுகின்றனர். அவர்கள் வலிமையில் இருந்து மேலும் வலிமைக்கு செல்கின்றனர். எங்கள் இளைஞர்கள் வெற்றிபெறவில்லை என்று ஏமாற்றம் அடைகிறார்கள், ஆனாலும் அவர்கள் இந்த அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வார்கள். ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.






