குல்தீப் யாதவுக்கு ஏன் வாய்ப்பு தரலை?.. இது நடந்தா மட்டுமே முடியும் – இந்திய பவுலிங் கோச் விளக்கம்

0
55
Kuldeep

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஏன் வாய்ப்பு தரவில்லை என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் விளக்கம் அளித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணி அதிரடியான பேட்டி முறையைப் பாணியாகக் கொண்டிருப்பதால், இந்திய தரப்பில் தாக்குதல் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு ஆரம்பம் முதலில் வாய்ப்பு தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஏன் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை?

இது குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசும்பொழுது ” குல்தீப் யாதவ் எப்போது விளையாடுவார் என்பதை விட, இந்திய அணியின் சமநிலையை கண்டறிவதும், இந்திய அணியின் பேட்டிங் வரிசையை பலமானதாக மாற்றுவதும் தான் முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்”

“கடந்த காலங்களில் இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வேகமாக இழந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இதன் காரணமாக பேட்டிங் வரிசையை பலமாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்போது குல்தீப் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகளை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். ஆனால் துரதிஷ்டவசமாக பேட்டிங்கை பலப்படுத்துவதால் அவரை சேர்க்க முடியவில்லை”

- Advertisement -

எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும்?

“நாள் முடிவில் உங்களுக்கு ஸ்கோர் போர்டில் ரன்கள் மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். எனவே வெளிப்படையாக நாங்கள் எங்களுடைய பேட்டிங் பாதுகாப்பை அதிகரிக்கிறோம். மேலும் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்க விரும்புகிறோம். குறிப்பாக இங்கிலாந்து விளையாடும் முறைக்கு இது அவசியம் ஆகிறது”

இதையும் படிங்க : கில்லுக்கு அந்த தகுதியே இல்ல.. சுந்தரை இப்படித்தான் நடத்துறதா?.. மூளை இல்லாத பிளான் – ரவி சாஸ்திரி விமர்சனம்

“இதுவரை விக்கெட் வறட்சியாக தான் இருந்திருக்கிறது. பந்து கொஞ்சம் சுழலவும் செய்கிறது. இதனால் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆட்டத்திற்குள் வருகிறார்கள். அதே சமயத்தில் நாங்கள் விரும்பும் வகையில் பேட்டிங் வரிசையில் முதல் ஆறு வீரர்கள் நிலையாக ரன்கள் எடுக்க ஆரம்பித்தால், குல்தீப் யாதவ் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -