தற்போது நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இன்று நபி மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கிய போதும் ஓவர் எதுவும் குறைக்கப்படவில்லை.
செபாலி வர்மா கலக்கல்
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 58 பந்தில் 45 ரன்கள், செபாலி வர்மா 78 பந்தில் 87 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். அடுத்து ஜெமிமா 24, கேப்டன் ஹர்மன்பிரீத் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதைத்தொடர்ந்து கடைசி வரை நின்று விளையாடி ஆட்டம் இழந்த தீப்தி சர்மா 58 பந்தல் 58 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து அதிரடியாக கடைசியில் விளையாடிய ரிச்சா கோஸ் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் காகா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா உலக சாம்பியன்
இதைத்தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனும் தொடக்க வீராங்கனைமான லாரா வோல்வோர்ட் மட்டுமே மிகச் சிறப்பாக விளையாடி 98 பந்தில் 101 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அனேரியா டெர்க்சன் 35, சுனே லீஸ் 25 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : பெண்கள் உகோ பைனல்.. சச்சின் சேவாக் செய்யாததை செய்த ஜோடி.. இந்திய அணி சாம்பியன் ஆகுமா?
இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பந்துவீச்சில் தீப்தி சர்மா 5 விக்கெட், செபாலி வர்மா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திர சாதனையை படைத்தது!






