12 வருடத்திற்கு பின்.. சாம்பியன் ஆன இந்திய அணி.. கேப்டன் ரோஹித் அபாரம்.. நியூசி அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

0
197

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாயில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து ஃபைனல்

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்த நிலையில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்த்ரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 37 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டம் இழந்த பிறகு ஆடுகளம் மெதுவாக காணப்பட்டதால் நியூசிலாந்து வீரர்கள் மெதுவான ஆட்டத்தை விளையாடினார்கள்.

இதில் டேரி மிச்சல் 101 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க இறுதி கட்டத்தில் கிலென் பிலிப்ஸ் 34 ரன்கள் மற்றும் பிராஸ்வெல் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இந்திய அணி சாம்பியன்

அதற்குப் பின்னர் வெற்றியிலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இதில் இந்திய அணியின் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கில் நிதானமாக விளையாடினார். 83 பந்துகளை எதிர் கொண்ட ரோஹித் சர்மா 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 76 ரன்கள் குவித்தார். விராட் கோலி இந்த முறை 1 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 பந்துகளில் 48 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

இதையும் படிங்க:ஆர்சிபி கோப்பையை வெல்ல கூடாது.. அதுக்காக நான் பிரார்த்தனை செய்வேன் – அம்பாதி ராயுடு ஆச்சரியம்

அதற்குப் பின்னர் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்தார்கள். இதனால் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது ஐசிசி கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக இருந்து விளையாடிய ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் இந்திய அணி ஒருமுறை மட்டும் தோல்வி அடைந்து மற்ற போட்டிகளில் அனைத்திலும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை மகேந்திர சிங் டோனி தலைமையில் 2013 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -