இந்திய கிரிக்கெட்

யாருக்கும் நடக்காத தப்பு எங்களுக்கு நடக்குது.. அதுக்கு ஏதாவது செஞ்சு தொடரை ஜெயிக்கணும் – இந்திய துணை பயிற்சியாளர் கருத்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பனிப்பொழிவு போட்டியில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பது குறித்து இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இறுதியாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் டாஸ் வென்று இருந்தது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக இருபது முறை ஒருநாள் கிரிக்கெட்டில் டாஸ் தோற்று இருக்கிறது. இது கோடியில் நடக்கும் அரிய சம்பவமாக அமைந்திருக்கிறது.

பனிப்பொழிவின் தாக்கம்

இந்தத் தொடரின் போட்டியில் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கின்ற காரணத்தினால், இந்திய சுழல் பந்துவீச்சாளர்களால் போட்டிக்குள் வர முடிவதில்லை. அவர்களால் பந்தை இறுக்கி கிரிப் செய்து வீச முடிவதில்லை. மேலும் பனிப்பொழிவு இருக்கின்ற காரணத்தினால் பந்து பேட்டுக்கு நன்றாக வருவதால் எளிதாக விளையாட முடிகிறது. இதனால் இந்திய அணி 358 ரன் குவித்தும் தோல்வி அடைந்தது.

இதற்கு அடுத்து 35 ஓவர்களுக்கு மேல் ஒரே பந்தை பயன்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரே பந்தை பயன்படுத்தும் பொழுது பனிப்பொழிவு அந்த பந்தை மேலும் ஈரமாக்கி விடுகிறது. இதனால் இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவது இன்னும் சிரமமாக மாறுகிறது. டாஸ் தோற்பதால் இந்திய அணி இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.

- Advertisement -

கோடியில் நடப்பது

இது குறித்து இந்திய துணை பயிற்சியாளர் பேசும்பொழுது “பனிப்பொழிவு ஆட்டத்தின் முடிவில் 10 முதல் 20% தாக்கத்தை செலுத்துகிறது. இந்த அளவிற்கு பனிப்பொழிவு ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை உருவாக்குகிறது. ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் தொடர்ந்து இருபது டாஸ் தோற்பது என்பது கோடியில் நடக்கக்கூடிய நிகழ்வு. அது எங்களுக்கு நடந்து கொண்டு இருக்கிறது”

இதையும் படிங்க : 531 டார்கெட்டுக்கு 457 ரன்.. 5வது நாளில் நியூஸியை கதறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்.. சாதனை வெற்றி தவறியது

” மேலும் 35 ஓவர் களுக்கு பிறகு ஒரே பந்து பயன்படுத்துவது என்ற விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. பந்து நன்றாக தேய்ந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்காக இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் பனிப்பொழிவு வந்து விடுகின்ற காரணத்தினால், ஒரே தந்தை பயன்படுத்தும் பொழுது அது இன்னும் ஈரம் ஆகிவிடுகிறது. மேலும் டாஸ் வெல்லவும் அடுத்து பனிப்பொழிவில் பந்து வீசவும் நாங்கள் திட்டங்களை வகுத்து வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by