இந்திய கிரிக்கெட்

தமிழக சாய் சுதர்சன் வாய்ப்பு முடிகிறதா?.. அவருக்கே அந்த உண்மை தெரியும் – இந்திய துணை பயிற்சியாளர் பேச்சு

இந்திய டெஸ்ட் அணியில் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் தொடர்ந்து தொடர என்ன செய்ய வேண்டும்? என இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் கிடைத்த வாய்ப்பை தமிழ்நாட்டில் இளம் வீரர் சாய் சுதர்சன் வீணடித்திருக்கிறார். இதன் காரணமாக கருண் நாயர் போல அவரும் அதிரடியாக நீக்கப்படுவாரா? என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மன அழுத்தத்தில் இருக்கிறார்

இது குறித்து இந்திய துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறும்பொழுது ” சாய் சுதர்சனுக்கு எங்கள் ஆதரவு கிடைத்திருப்பது போல கேப்டன் மற்றும் பயிற்சியாளர் குழுவில் ஆதரவும் மிக நல்ல முறையில் கிடைத்திருக்கிறது. அவர் மிக விரைவாக தன்னுடைய திறமைக்கு ஏற்ற வகையில் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்”

“மேலும் அவர் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நம் எல்லோருக்குமே அவர் எவ்வளவு நல்ல வீரர் என்பது குறித்து தெரியும். அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் நடுவரிசையில் பேட்டிங் செய்வதற்கு உங்களை பொருத்திக் கொள்ள கொஞ்சம் காலம் எடுக்கலாம்”

- Advertisement -

இதை செய்யலைனா கஷ்டம்

“சாய் சுதர்சனுக்கு இந்திய அணியில் தொடர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மிக நன்றாக தெரியும். இங்கு நாம் எதிர்பார்ப்பது போல் சிறந்த முறையில் விளையாடாவிட்டால் இந்திய அணியில் தொடர முடியாது என்று அவருக்கு தெரியும். இந்த அழுத்தத்தை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம்”

இதையும் படிங்க : ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு.. நான் வெளியில இருக்கேன்.. முதல் முறை மௌனம் கலைத்த ஷமி பேட்டி

“நான் சொல்வது போல அவர் அடுத்து விளையாட செல்லும் பொழுது பெரிய அளவில் ரன்கள் எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் வெளியில் இருக்கிறார்கள். அவருடைய திறமைக்கு ஏற்ற விளையாட்டை அவர் அடுத்து விளையாடுவார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
Published by