சதமடித்த இருவரையும் தூக்கிய ஜடேஜா… 300 ரன்கள் முன்னிலையை நெருங்கும் ஆஸி…. இங்கிருந்து இந்தியா வெல்ல முடியுமா?

0
1771

மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 123 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து, மொத்தமாக 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து தடுமாற்றம் கண்டது.

- Advertisement -

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி முதல் ஓவரிலேயே பரத் விக்கெட் இழந்தது. அதன் பிறகு உள்ளே வந்த தாக்கூர், களத்தில் இருந்த ரஹானே உடன் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிபிலிருந்து மீட்க உதவினார்.

நன்றாக விளையாடி வந்த ரகானே உணவு இடைவேளை முடிந்து வந்த சில ஓவர்களிலேயே ஆட்டம் இழந்தார். இவர் 89 ரன்கள் அடித்து அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டார். அதன் பிறகு இறுதிவரை போராடிய தாக்கூர் 51 ரன்கள் ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 172 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. துவக்கத்திலேயே டேவிட் வார்னர்(1) விக்கெட்டை முகமது சிராஜ் தூக்கினார். பின்னர் உஸ்மான் கவஜா(13) விக்கெட்டை உமேஷ் யாதவ் தூக்க, இந்திய அணிக்கு சிறு நம்பிக்கை பிறந்தது

- Advertisement -

அதன் பிறகு லபுஜானே உடன் ஜோடி சேர்ந்து ஸ்மித் ரன்குவிப்பில் ஈடுபட்டார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வந்தவுடன் அவரது பந்தில் அடிக்கப் பார்த்தார் ஸ்மித். துரதிஷ்டவசமாக டாப் ஏட்ஜ் எடுத்து சர்துல் தாக்கூர் வசம் பிடிப்பட்டு வெளியேறினார்.

கடந்த இன்னிங்சில் 163 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட், இம்முறை ஜடேஜா பந்தில் 18 ரன்கள்ளுக்கு அவுட் ஆனார். கடந்த இன்னிங்ஸில் சதம் அடித்த இருவரின் விக்கெட்டையும் ஜடேஜா எடுத்தபின் இந்திய வீரர்கள் மத்தியில் புத்துணர்வு காணப்பட்டது.

ஆஸ்திரேலியா அணி 111 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்றுக்கொண்டது. களத்தில் இருந்த லபுஜானே 41 ரன்கள், கிரீன் 7 ரன்களுடன் இருக்கின்றனர்.

நாளை 4ஆம் நாள் காலை ஆஸ்திரேலிய அணியை 200 ரன்களுக்குள் சுருட்டி, 400 ரன்கள் முன்னிலைக்குள் சேஸ் செய்யும் நிலை ஏற்பட்டால், இந்திய அணியின் பக்கம் அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.