கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்திய அணிக்கு 121 ரன்கள் நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஆல் ரவுண்டரை வீணடிப்பதாக முன்னாள் வீரர்கள் கவலை

இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டியை பந்துவீச அனுமதிக்காததற்காக இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் டோடா கணேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில், நிதிஷ் வெறும் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார். 22 வயதான நிதிஷ், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் கூட வீசவில்லை.

121 ரன்கள் இலக்கு

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை மீண்டும் ஃபாலோ-ஆன் தர முடிவு செய்தது. நான்காம் நாள் ஆட்டத்தில்,  வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம்  இந்திய அணிக்கு 121  ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இன்னிங்ஸில் இந்தியா  118.5 ஓவர்கள் வீசியுள்ளது.ஆனால் நிதிஷ் ரெட்டியை ஒரு ஓவர் கூட வீச அனுமதிக்கவில்லை.

ஆனால், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த இன்னிங்ஸில் ஒரு ஓவர் வீசியுள்ளார். நிதிஷின் பந்துவீச்சு பயன்பாடு குறைவாக இருப்பதை கண்டு அதிருப்தி அடைந்த டோடா கணேஷ், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,  “நிதிஷ் ரெட்டியை ஆல்-ரவுண்டர் பங்கிற்கு தயார் செய்யவில்லை என்றால், அவருக்கு பந்துவீச்சு வாய்ப்பே கொடுக்காமல் எப்படி தயார் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

நிதிஷ் குமாரின் செயல்பாடு:

இதற்கிடையில், நிதிஷ் முதல் இன்னிங்ஸில் 54 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க: 14 வயது வைபவ் சூரியவன்சிக்கு கிடைத்த கௌரவம்.. இந்திய கிரிக்கெட் எதிர்கால நகர்வு – வெளியான தகவல்

எனினும் ஜெய்ஷ்வால் பந்து வீசிய ஒரு ஓவரில் அவர் மூன்று ரன்கள் விட்டுக் கொடுத்தார்.ஜெய்ஸ்வாலின் பந்துவீச்சு முறை வார்னேவை நினைவுபடுத்தும் விதமாக இருந்ததாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். ஜெய்ஸ்வால் ஏற்கனவே நல்ல பேட்ஸ்மேனாக உள்ள நிலையில் தற்போது சுழற் பந்துவீசுவதன் மூலம் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம் பிடிக்க அவர் புதிய விஷயங்களை கற்று வருவதாக பாராட்டியுள்ளனர்.

- Advertisement -
Published by
Tags: Ind vs Wi