IND vs WI: முதல் டெஸ்ட்டிக்கான ஆடுகளம்.. பார்முலாவை மாற்றும் கில்.. போட்டி குறித்து நம்பிக்கை

0
50

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி குறித்து கேப்டன் கில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.  அகமதாபாத்தின் மைதான ஆடுகளத்தை பார்த்த அவர், இந்திய அணி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை களம் இறக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், மற்றும் அக்ஸர் படேல் ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.

- Advertisement -

பிளேயிங் XI குறித்து பதில்:

ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆப்சனாக உள்ளார்.இது குறித்து பேசிய கில், “நாளை எங்கள் 11 வீரர்கள் பட்டியலை முடிவு செய்வோம். வானிலை மற்றும் ஆடுகளத்தின் நிலைமைகளைப் பொறுத்து, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை இறக்குவதற்கு ஆர்வமாக இருக்கலாம்.”

“இந்த மைதானத்தில் நான் பெரும்பாலும் டி20 கிரிக்கெட் ஆடியுள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான ஆடுகளங்கள் வேறுபட்டவை. இந்த டெஸ்டிற்கு விரைவாக மாற வேண்டும். நான் மனதளவில் தயாராக இருக்க முயற்சிக்கிறேன். இப்படி மன நிலையை மாற்றுவது மனதளவில் ஒரு சவால்.”

- Advertisement -

“டி20-லிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது மனதளவில் மிகவும் கடினமானது. பேட்ஸ்மேன்களுக்கு, இது உடல் ரீதியாக இல்லாமல் மனதளவில் களைப்பை ஏற்படுத்துகிறது. இப்போது, நான் புத்துணர்ச்சியாக உள்ளேன்” என்று கில் கூறினார்.செப்டம்பர் 28 அன்று பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது.

பும்ரா குறித்து விளக்கம்:

கில் உட்பட ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் ஆசிய கோப்பை மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர் இரண்டிலும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் பும்ரா குறித்து பேசிய கில், “பும்ராவின் பணிச்சுமை மேலாண்மை குறித்து, எதுவும் முன்கூட்டியே முடிவு செய்யப்படவில்லை. ஒவ்வொரு போட்டியின் அடிப்படையில் மதிப்பீடு செய்வோம்.”

இதையும் படிங்க:

“டெஸ்ட் எத்தனை நாட்கள் நீடிக்கிறது, எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்து,” என்று கில் கூறினார்.கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய பும்ரா, சிட்னியில் நடந்த இறுதி டெஸ்டின் போது  காயம் அடைந்தார். அதனால், அவர் அடுத்த சில மாதங்களுக்கு விளையாடாமல் இருந்து, 2025 ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கினார். இங்கிலாந்து தொடரில் 5 டெஸ்ட் பதிலாக மூன்று போட்டியில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -