இந்திய அணி பேட்டிங்கில் திணறல்.. பாலோ ஆனை தவிர்க்க, இந்தியா எவ்வளவு ஸ்கோர் எடுக்கனும்.. விவரம்

0
295

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில்  திணறி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது. இதனை அடுத்து விக்கெட் இழப்பின்றி ஒன்பது ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

- Advertisement -


தடுமாறிய வீரர்கள்:

ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் 22 ரன்களில் ஆட்டம் இழக்க ஜெய்ஸ்வால் 97 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 95 ரன்களில் இரண்டு விக்கெட் என்ற ஸ்கோர் எடுத்திருந்த நிலையில் அதன் பிறகு வந்த இந்திய வீரர்கள் மோசமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை வெறுப்பேற்றினர்.

சாய் சுதர்சன் வந்த வேகத்தில் ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரல் டக்அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் கேப்டன் ரிஷப் பண்ட் சிக்சர் அடித்து தன்னுடைய கணக்கை தொடங்கினார். எனினும் அவர் வெறும் ஏழு ரன்கள் மட்டுமே சேர்த்தார். அனுபவ வீரரான ஜடேஜா ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பாலோ ஆனை தவிர்க்குமா இந்தியா?

இந்த நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி 10 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 122 ரன்கள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த சூழலில் ஃபாலோனை இந்தியா தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஃபாலோனை எடுக்க வேண்டும் என்றால் இந்திய அணி 290 ரன்கள் என்ற ஸ்கோரை தொட வேண்டும் .

இதையும் படிங்க: 489 ரன்.. தென்னாபிரிக்க ஆதிக்கம்.. இந்திய பவுலர்களை இனி இப்படி தான் திட்டுவோம்.. ஆகாஷ் சோப்ரா

அதற்கு மேலும் இந்திய அணி 168 ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால் கைவசம் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இன்று தான் மூன்றாவது நாள் ஆட்டம் என்பதால் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஒன்று இந்தியா இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவலாம். இல்லையெனில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவலாம். இந்த போட்டியை சமன் செய்தாலே அது மிகப்பெரிய அதிசயமாகும்.

- Advertisement -