இந்திய டெஸ்ட் அணியில் இவ்வளவு ஆல் ரவுண்டர் எதுக்குங்க? நிதிஷ் என்ன கிழிச்சாரு.. கம்பீரை வெளுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்

0
55

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்த பிறகு, டெஸ்ட் அணியில் ஆல்-ரவுண்டர்கள் ஆட வைக்கும் கம்பீரின் முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் கடுமையாக விமர்சித்தார். கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 2-0 என்று கைப்பற்றியது.

549 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்தியா ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு ஒரு சிறப்பு பேட்ஸ்மேன் இல்லாதது பெரிய குறையாக அமைந்ததாகவும், இவ்வளவு ஆல்ரவுண்டர்கள் தேவையில்லை என்றும் பார்த்திவ் கருதுகிறார்.

- Advertisement -

பிளேயிங் லெவன் சரியானது வேண்டும்:

இது குறித்து பேசிய அவர், “இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று பயிற்சியாளரின் தவறு. பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் தங்கள் வேலையை செய்கிறார்கள். ஆனால் நாம் சரியான பிளேயிங் லெவனை ஆட வைக்கிறோமா என்பதே கேள்வி. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ஆல்-ரவுண்டர்கள் தேவையா? டெஸ்ட் கிரிக்கெட் என்பது  திறன் கொண்ட வீரர்களின் விளையாட்டு.”

“ஆறு பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும். சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர், அவரது சராசரி 40-க்கு மேல் இருக்க வேண்டும். பிறகு நான்கு பவுலர்கள், ஒரு ஆல்-ரவுண்டர். இதுவே சிறந்தது.” முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா 201 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறிய இந்தியா, வீட்டில் 0-2 என்று தொடரை இழந்தது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்டில் ஜடேஜா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, 54 ரன்களும் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்ஸில் 48 ரன்கள் சேர்த்தார். ஆனால் மூன்றாவது ஆல்-ரவுண்டராக விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 10 ஓவர்கள் மட்டுமே வீசினார். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

நிதிஷ் குமார் எதுக்கு:

பேட்டிங்கில் 10 மற்றும் 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது குறித்து பேசிய பார்த்திவ், “நமக்கு ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் இருக்கிறார்கள். இருவரும் பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சம அளவு திறமை உடையவர்கள். அதனால் நாம் உண்மையிலேயே ஆல்ரவுண்டர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். குல்தீப் ஒரு சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னர்.”

இதையும் படிங்க: இந்திய அணியின் தோல்விக்கு.. கம்பீரின் இந்த மோசமான முடிவுகள் திட்டங்களே காரணம் – கும்ப்ளே விமர்சனம்

“இரண்டு தரமான பேஸ் பவுலர்கள் இருக்கிறார்கள். கிரீன் பிட்ச் என்றால் ஒரு பேஸரை அதிகமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த எக்ஸ்ட்ரா ஆல்ரவுண்டர் தேவையில்லை. ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் மூலம் ஒரு வீரரின் மதிப்பு எவ்வளவு உயர்ந்தது என்பதை பார்த்தோம். நாம் சரியான பேட்ஸ்மேனையோ சரியான பவுலரையோ ஆட வைக்கவில்லை. நிதீஷ் குமார் ரெட்டியை குறை சொல்ல வரவில்லை. ஆனால் இந்தியா இனி இந்த சிந்தனை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.

- Advertisement -