இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்களை ஐபிஎல் அடிப்படையில் தேர்வு செய்வதற்கு இந்திய தேர்வுக்குழுவின் மீது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, அதிருப்தி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 0-2 என்று தோல்வியடைந்தது.
இது குறித்து பேசிய உத்தப்பா, “இந்திய கிரிக்கெட்டில் என்னை எப்போதும் தொந்தரவு செய்து வரும் ஒரு நிலையான பிரச்சனை இது. ஐபிஎல் செயல்திறன் அடிப்படையிலேயே சில வீரர்கள் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். நான் விளையாடிய காலத்தில் இதனால் மிகவும் வருத்தமடைந்தேன்.”
“டெஸ்ட் தொப்பியைப் பெறுவதற்காக உள்நாட்டு போட்டிகளில் உயிரை விட்டு ரன்கள் அடித்தேன். ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை. வெள்ளைப் பந்து செயல்பாடு அடிப்படையில் மற்றவர்கள் எனக்கு முன்னால் தேர்வாகி விடுவார்கள்.”
“கவுதம் கம்பீர் செய்யும் பல விஷயங்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வேலை செய்கின்றன. அதே முறை சிவப்புப் பந்து கிரிக்கெட்டிலும் வெற்றி பெறும் என்று அர்த்தமல்ல. அங்கு நிச்சயம் நிபுணத்துவம் தேவை. ஆனால் நாம் எல்லோரும் தவறவிட்ட ஒரு விஷயம் யாரும் வீரர்களைப் பற்றியோ, வீரர்கள் எடுக்க வேண்டிய பொறுப்பைப் பற்றியோ பேசவில்லை.”
“எல்லோரும் பயிற்சியாளரை மட்டுமே தாக்குகிறார்கள். அவரது பாணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள குறைபாடுகள் பற்றி பல விமர்சனங்கள் உள்ளன. ஆனால் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி மிகக் குறைவாகவே பேசப்படுகிறது. வீரர்கள் இன்னும் கொஞ்சம் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று உத்தப்பா கூறினார்.
இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணிக்கு வரப்போகும் புதிய 5 வீரர்கள்.. அகர்கர் எடுக்கும் முக்கிய முடிவு – வெளியான செய்திகள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தருவியில் இருந்து பலரும் கம்பீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் இந்த நிலையில் அவரை தற்காக்கும் விதமாக இன்று காலையிலிருந்து சில முன்னால் வீரர்கள் கருத்து தெரிவித்து வருவது இங்கு கவனிக்கத்தக்கது.இந்திய அணி இ
தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை அன்று ராஞ்சியில் நடைபெறவுள்ளது.