இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வீரர்கள் பங்கு பெற இருக்கிறார்கள்.
இந்த அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த முகமது சமி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தேர்வாகி இருக்கிறார்.
இந்தியா vs இங்கிலாந்து டி20 அட்டவணை, எதில் பார்க்கலாம்:
வரும் 22 ஆம் தேதி முதல் டி20 போட்டி கொல்கத்தாவிலும், வரும் 25ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டி சென்னையிலும், வரும் 28ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டிலும், நான்காவது டி20 போட்டி ஜனவரி 31 ஆம் தேதி புனேவிலும் வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி ஐந்தாவது டி20 போட்டி மும்பை நகரிலும் நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஆன்லைனில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஆப்பில் பார்க்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த வங்கதேசம் நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் விளையாடிய போது போட்டிகள் அனைத்தும் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ ஆப்பில் நேரலை செய்யப்பட்டது. இந்த நிலையில் டிஸ்னி மற்றும் ஜியோ நிறுவனம் ஒன்றிணைந்த அடுத்து தற்போது கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஸ்டார் சேனலுக்கு திரும்பி இருக்கிறது.
இரு அணிகள் விவரம்:
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னாய், வாஷிங்டன், வாஷிங்டன் மற்றும் துருவ் ஜூரல்.
இங்கிலாந்து டி20 அணி: ஹாரி புரூக், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ரெஹான் அகமது, ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட். மஹ்மூத்






