117 பந்துகள்.. இதுவரை எந்த ஸ்பின்னரும் டிராவிஸ் ஹெட் எதிராக செய்யாத விஷயம்.. வருண் சக்கரவர்த்தி அசத்தல்

0
829

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் , ஆஸ்திரேலியாவும் பல பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் இந்திய அணிக்கு எப்போதுமே ஆபத்தை தரக்கூடிய வில்லனாக டிராவிஸ் ஹெட் இருக்கின்றார்.
ஒரு காலத்தில் எப்படி ரிக்கி பாண்டிங், ஹைடன் போன்ற வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவார்களோ, அதே போல் டிராவிஸ் ஹெட் மட்டும் தனியாளாக நின்று இந்தியாவின் கதையை முடித்திருக்கிறார்.

50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து அண்மையில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடர் வரை தனியாக நின்று இந்தியாவை வீழ்த்தி இருக்கிறார். இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது என்று தெரிந்த உடனே ரசிகர்கள் பலரும் டிராவிஸ் ஹெட்டை  நிணைத்து பயப்பட தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

கோட்டை விட்ட இந்திய வீரர்கள்:

அதற்கு தகுந்தார் போல் இன்றைய ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடினார். முதலில் ஜீரோ ரன்கள் எடுத்திருந்தபோது டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை சமி கோட்டை விட்டார். அதன் பிறகு நான்காவது ஓவர் முடிவில் ஜடேஜா ஒரு ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இதில் டிராவிஸ் ஹெட்டின் ஸ்ட்ரைக் ரேட் 118 என்று அளவில் இருந்தது. அப்போதுதான் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் பந்தை ரோகித் சர்மா வழங்கினார். அப்போது வருண் பந்தை எதிர்கொண்ட  டிராவிஸ் ஹெட், தூக்கி அடித்தார். அப்போது அது கில்லிடம் கேட்ச் ஆனது.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி சாதனை:

இதன் காரணமாக ஆபத்து இந்தியாவுக்கு நீங்கியது. இதன் மூலம் வருண் சக்கரவர்த்தி ஒரு சாதனையை படைத்திருக்கிறார். அதாவது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை முதல் 10 ஓவரில் 117 பந்துகளை சுழற் பந்துவீச்சாளர்களிடம் ஹெட் எதிர் கொண்டிருக்கிறார். அதில் மொத்தமாக அவர் 135 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: CT 2025: ஆஸி எதிரான செமி பைனலில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த இந்திய அணி.. காரணம் என்ன.?

அதாவது பவர் பிளேவில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 135 என்ற ஸ்ட்ரைக் ரைட்டை ஹெட் வைத்திருக்கிறார். ஆனால்  ஒருமுறை கூட ஆட்டம் இழந்ததில்லை. ஆனால் தற்போது  வருண் சக்கரவர்த்தியிடம் முதல் முறையாக அவர் ஆட்டமிழ்ந்து இருக்கிறார். இதன் மூலம் ஹெட், சுழற்பந்துவீச்சுக்கு  எதிராக எவ்வளவு அபாரமாக விளையாடி இருக்கிறார் என்றும் அவரை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தியது எவ்வளவு பெரிய சாதனை என்றும் தெரியவந்திருக்கிறது.

- Advertisement -