இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான அணி 20 வருடங்களுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணிக்கு அடுத்து மோசமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
தற்போது முதல் டெஸ்ட் போட்டிக்கு அமைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முல்தான் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு அதிகபட்ச சாதகத்துடன் இருக்கிறது. இதை தார் ரோடு என மைக்கேல் வாகனும், பவுலர்களின் கல்லறை என கெவின் பீட்டர்சனும் விமர்சனம் செய்திருந்தார்கள்.
இப்படியான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் 101, ஷான் மசூத் 151, ஆகா சல்மான் 109 என மூன்று பேர் சதம் அடித்தார்கள். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணியின் பேட்டிங் யூனிட் மீது இருந்த விமர்சனங்களுக்கு ஓரளவு பதில் கொடுத்தது போல இருந்தது.
இப்படியான நிலையில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் திருப்பி பெரிய பதிலடி கொடுத்தது. அந்த அணிக்கு ஜோ ரூட் 262, ஹாரி புரூக் 317 ரன்கள் குவித்து மிரட்டினார்கள். அந்த அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 823 ரன்கள் எடுத்து அதிரடியாக டிக்ளர் செய்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி 26 ஓவர் 120 ரன்கள், நசிம் ஷா 31 ஓவர் 157 ரன்கள், அப்ரார் அகமது 35 ஓவர்கள் 174 ரன்கள், அமீர் ஜமால் 24 ஓவர்கள் 126 ரன்கள், ஆகா சல்மான் 18 ஓவர்கள் 118 ரன்கள், சையும் அயூப் 14 ஓவர்கள் 101 ரன்கள் என மொத்தம் பாகிஸ்தானின் 6 பந்துவீச்சாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ரன்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : 823 ரன் கொடுத்து.. 6 விக்கெட்டையும் தந்த பாகிஸ்தான் அணியின் சோகம்.. இங்கிலாந்து வெற்றி வாய்ப்பில் முன்னணி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பாக ஜிம்பாப்வே அணியில் 20 வருடங்களுக்கு முன் ஒரு டெஸ்ட் போட்டியில் 6 பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் 100க்கும் மேற்பட்ட ரன்கள் கொடுத்திருந்தார்கள். இந்த வகையில் இது மோசமான சாதனையாக அமைந்திருந்தது. தற்பொழுது 20 வருடங்கள் கழித்து இதே மோசமான சாதனையை பாகிஸ்தான் செய்திருக்கிறது.