கடைசியில் பரபரப்பான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

0
350
Csk vsGt

பதினாறாவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரிட்சை நடத்தி முடித்திருக்கின்றன.

இந்த போட்டிக்கான டாஸில் வென்று குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, சென்னை அணிக்கு கான்வே மற்றும் ருத்ராஜ் இருவரும் துவக்க ஜோடிகளாக களமிறங்கினார்கள்.

- Advertisement -

சென்னை அணிக்கு முதலில் இறங்கிய ருத்ராஜ் கடைசியில் வந்த மகேந்திர சிங் தோனி தவிர வேறு எவரும் அந்தச் சூழ்நிலைக்கான ஆட்டத்தை சரியாக விளையாடவே இல்லை.

ருத்ராஜ் ஒருபுறத்தில் 50 பந்துகளில் 92 ரன்களை நான்கு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் குவித்தார். இறுதியில் வந்த மகேந்திர சிங் தோனி 7 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இன்னொரு பக்கத்தில் கான்வே ஒரு ரன், மொயின் அலி 23, பென் ஸ்டோக்ஸ் ஏழு ரன், அம்பதி ராயுடு 12 ரன், சிவம் துபே 19 ரன், ஜடேஜா ஒரு ரன் என யாரும் சரியாக விளையாடாமல் ருதுராஜுக்கு ஒத்துழைப்பு தராததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணியால் 178 ரண்களே சேர்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் சென்னை அணி 200 ரன்களை எட்டும் இடத்தில் இருந்தது. குஜராத் தரப்பில் சமி மற்றும் ரஷித் தான் இருவரும் சிறப்பாக பந்துவீசி தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய குஜராத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சகா 25 ரன்கள், மூன்றாவது இடத்தில் வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 22 ரன்கள், இன்னொரு தமிழக வீரர் 27 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா எட்டு ரன்கள் என எடுத்து வெளியேறினார்கள்.

மறுமுனையில் குஜராத் அணித்து இளம் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாடி 36 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்குப் பிறகு கொஞ்சம் ஆட்டம் சென்னை அணியின் பக்கம் வருவதாக இருந்தது.

- Advertisement -

கடைசி மூன்று ஓவர்களுக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 18 வது ஓவரில் ஏழு ரன்கள் மட்டுமே தரப்பட்டது. இதனால் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட, 19ஆவது தீபக் சகர் ஓவரில் திவாட்டியா ஒரு பவுண்டரி அடிக்க, அடுத்து வந்த ரஷீத் கான் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை குஜராத் பக்கம் எடுத்துக் கொண்டு போய்விட்டார். இறுதியில் திவாட்டியா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி மூலம் மொத்த ஆட்டத்தையும் முடித்து விட்டார். சென்னை அணியின் தரப்பில் அறிமுகவீரர் ஹங்கர்கேகர் மூன்று விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.