டீம் மீட்டிங்லயே ஸ்கை விக்கெட் எடுக்க பிளான் பண்ணோம்; எனக்கு ஐடியா கொடுத்தாங்க – சீக்ரெட் என்னவென்று மோகித் சர்மா பேட்டி!

0
2917

டீம் மீட்டிங்கில் சூரியகுமார் யாதவ் விக்கெட் எடுப்பது குறித்து நான் திட்டமிட்டோம். அதன்படியே செயல்பட்டோம் என்று மோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரு அணிகளும் மோதிய இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் இறங்கியது. அபாரமான ஃபார்மை வெளிப்படுத்திய சுப்மன் கில்(129) இந்தபோட்டியிலும் சதம் அடித்து 3அவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்களில் 233 ரன்கள் குவித்தது குஜராத் அணி.

- Advertisement -

இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ஓபனிங் எடுபடவில்லை. இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். சூரியகுமார் யாதவ்(61) இந்த போட்டியிலும் அசத்தோனார். ஆனால் அவரும் கடைசி வரை நிற்கவில்லை.

கிரீன்(30) மற்றும் திலக் வர்மா(43) ஆகியோர் கிடைத்த துவக்கத்தை பெரிய ஸ்கோராக எடுத்துச்செல்ல முடியவில்லை. இதனால் பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் விக்கெட் உட்பட 5 விக்கெட்டுகள் எடுத்த மோகித் சர்மா போட்டி முடிந்தபின் பேட்டியளிக்கையில், சூரியகுமார் யாதவ் விக்கெட் குறித்து திட்டமிட்டதாக கூறினார். மோகித் சர்மா பேசியதாவது:

- Advertisement -

“இன்று ஐந்து விக்கெட்டுகளை விரைவாக எடுத்ததில் எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருப்பதாக உணர்கிறேன். இன்று சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் விளையாடிய விதம் மற்றும் அவர்களது விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், போட்டி கைநழுவி சென்றுவிடும் என்கிற உணர்வை கொடுத்தது.

ஒருவேளை நான் சூரியகுமாருக்கு பந்துவீசினால் எதுவும் வித்தியாசமாக முயற்சிக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். அணியினர் மத்தியில் மீட்டிங் நடந்தபோது அனைவரும் விவாதித்தது என்னவென்றால், சூரியகுமார் யாதவிற்கு வித்தியாசமாக பந்துவீசக்கூடாது; இப்படி செய்தால் அது அவருக்கு சாதகமாக சென்றுவிடும்.

எனக்கு பந்துவீச்சு பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியபோது, சரியான லைன் மற்றும் லென்த் வீசினால் போதுமானது என்றார்கள். அந்த ஐடியா எனக்கு எடுபடும் என்று உள்ளுணர்வு சொன்னது. அதை செயல்படுத்தினேன். இந்த சூழலில் அவர் என்னை 6 சிக்ஸர்கள் அடித்தாலும் பரவாயில்லை. என்னுடைய திட்டத்தில் சரியாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அவருடைய விக்கெட் எடுத்தால் போட்டி முடிந்துவிடாது என்றாலும், அந்த விக்கெட்டை எடுத்தால் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்துவிடலாம் என்றும் திட்டமிட்டு பந்துவீசினேன். கடைசியில் திட்டமிட்டபடி, அவரது விக்கெட்டை எடுத்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. இருப்பினும் இந்த மைதானத்தில் கடைசி பந்து மற்றும் கடைசி விக்கெட் எடுக்கும் வரை போட்டி முடியவில்லை என்று தெரியும். ஆகையால் கடைசி வரை போராடியது வெற்றியில் முடிந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.