என் வாழ்க்கையில் இதுதான் சிறந்த இன்னிங்ஸ்; என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை; போட்டிக்குப் பிறகு விராட் கோலி உருக்கம்!

0
14900
Viratkohli

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர், தகுதிச்சுற்று போட்டிகளின்போதே பல எதிர்பாராத திருப்பங்களோடு மிக அருமையாக ஆரம்பித்து நடந்து முடிந்தது!

அதேபோல் நேற்று பிரதான சுற்றில் முதல் போட்டியில் இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தும் வலுவான அணியான ஆஸ்திரேலிய அணியை நியூசிலாந்து அணி மிக எளிதாக வீழ்த்தி ஆச்சரியமளித்தது.

- Advertisement -

இன்று எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி அதி உயர் அழுத்தம் நிறைந்ததாக அமைந்து, ரசிகர்களின் இதயத்துடிப்பை பலமடங்கு எகிறச் செய்தது.

முதலில் பந்துவீச்சில் இந்திய அணி கோலோச்ச, பிறகு பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி திரும்பி வந்தது, இந்திய அணி பேட் செய்யும்பொழுது ஆரம்பத்தில் பாகிஸ்தான் பந்து வீச்சில் கோலோச்ச, இறுதியில் இந்திய அணி பேட்டிங்கில் திரும்பிவந்து, கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் கதாநாயகனாக 53 பந்தில் 82 ரன்கள் குவித்த விராட் கோலி இருந்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய விராட்கோலி
“இது ஒரு அருமையான சூழ்நிலை. தற்பொழுது பேச சத்தியமாக என்னிடம் வார்த்தைகள் இல்லை. இதெல்லாம் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கடைசி வரை நம்மால் களத்தில் இருக்க முடியும் நம்புங்கள் என்று என்னிடம் ஹர்திக் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் வார்த்தைகளை இழந்தவனாக இருந்தேன் ” என்று கூறினார்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய விராட் கோலி
” அப்பொழுது ஷாகின் பந்துவீசினார் என்று நினைக்கிறேன். நான் அவரது ஓவரில் ரன்கள் அடிக்க வேண்டும் என்று ஹர்திக்கிடம் கூறினேன். திட்டம் மிக எளிமையானது. நவாஸ் பந்துவீச ஒரு ஓவர் இருந்தது. நான் ஹாரிஸ் ஓவரை அடித்தால், கடைசி ஓவருக்கு அவர்கள் பீதி அடைந்து விடுவார்கள். இதன்படியே கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது ” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” ஹாரிஸ் ஓவரில் இரண்டு சிக்சர்கள் வந்த பொழுது, நான் ஒருவிதமாக வார்த்தைகளை இழந்து, உள்ளுணர்வாக அதைப் பார்த்தேன். என்னை நானே அசையாமல் இருக்கச் சொல்லிக் கொண்டேன். லாங் ஆனில் வந்த முதல் சிக்ஸ் எதிர்பாராதது. அடுத்து பேக் ஆப் லென்த்தில் வீசப்பட்ட மெதுவான பந்தை பார்த்து என் பேட்டை பைன் லெக் பக்கம் வீசினேன். முன்பு மொகாலியில் ஐம்பத்தி இரண்டு பந்துகளுக்கு 82 ரன்கள் விளாசிய ஆட்டத்தை என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்லியிருந்தேன். தற்போது ஐம்பத்தி மூன்று பந்தில் 82 ரன்கள் வந்திருக்கிறது. இதுவும் என்னுடைய சிறந்த இன்னிங்ஸ். நான் இத்தனை மாதம் ரன்கள் இல்லாமல் போராடிக் கொண்டிருந்த பொழுது நீங்கள் என்னை பின் தொடர்ந்து என்னுடன் இருந்தீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்!