இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், ட்விட்டரில் மனமுடைந்து தன் சோகத்தை வெளிப்படுத்திய ராகுல் தெவாட்டியா – டிவிட் இணைப்பு

0
96

2020 மற்றும் 2020 1 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ராகுல் தெவாட்டியா இந்த ஆண்டு நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் விளையாடியிருந்தார். கடந்த ஒரு சில வருடங்களை விட இந்த ஆண்டு அவரது ஆட்டம் மிக அற்புதமாக இருந்தது என்றே சொல்லலாம்.

ஆல்ரவுண்டர் வீரரான அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியதைவிட பல மடங்கு அதிகமாக குஜராத் அணியில் இந்த ஆண்டு விளையாடி இருக்கிறார். 12 இன்னிங்ஸ்களில் மொத்தமாக அவர் குவித்த ரன்கள் 217. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் சராசரி விகிதம் 31. குறிப்பாக ஸ்ட்ரைக் ரேட் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது. 12 இன்னிங்ஸ்களில் 6 இன்னிங்ஸ்களில் 150 ஸ்ட்ரைக் ரேட் மேல் விளையாடியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147.62.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராகவும் அயர்லாந்து அணிக்கு எதிராகவும் தேர்ந்தெடுக்கப்படாத ராகுல் தெவாட்டியா

நல்ல பார்மில் இருந்த அவருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சரி அதற்கு அடுத்து நடைபெற இருக்கின்ற அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்த்தால், அதிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நேற்று அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடப் போகும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல் வெளியானது. ஹர்திக் பாண்டியா தலைமையில் வெளியான இந்திய அணியில் இவரது பெயர் இணைக்கப்படவில்லை.

- Advertisement -

எதிர்பார்ப்பு என்னை காயப்படுத்துகிறது

ராகுல் தெவாட்டியா இன்று தன்னுடைய ட்விட்டர் கணக்கில் தான் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படாதை சுட்டிக் காட்டும் வகையில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.”எதிர்பார்ப்புகள் என்னை காயப்படுத்துகிறது” என்று அவர் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பதிவு செய்து வேதனை தெரிவித்தார்.

அவருடைய பதிவுக்கு கீழ் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் கூடிய விரைவில் இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் என்று அவருக்கு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 தொடர்கள் இனி வரும் நாட்களில் அடுத்து அடுத்து வரவிருக்கும் நிலையில் இவருக்கான வாய்ப்பு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.