ஆசியகோப்பையில்பாகிஸ்தான் வீரர்களை சந்தித்தபோது, போட்டிக்கு பிறகு நாங்கள் இதையெல்லாம் பேசிக்கொள்வோம் – ரோகித் சர்மா பேட்டி!

0
2092

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டபோது, போட்டி முடிந்த பிறகு நாங்கள் இதையெல்லாம் பேசிக் கொள்வோம் என சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார் ரோகித் சர்மா.

டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று இருக்கிறது. பெர்த் மைதானத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடியது. அடுத்ததாக நியூஸிலாந்து அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது பிசிசிஐ.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரில், தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. வருகிற 23ஆம் தேதி நடைபெறும் இப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் டி20 தொடரை முடித்துவிட்டு நேரடியாக ஆஸ்திரேலியா சென்றுவிட்டது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் டி20 தொடரை முடித்துவிட்டு, தற்போது நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடியது. தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரையும் வென்றது. இரண்டு அணிகளும் தற்போது வலுவான நிலையில் இருப்பதால் போட்டி கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உல்ளது.

வருகிற அக்டோபர் 16ஆம் தேதி உலக கோப்பை துவங்குகிறது. அதற்கு முன்பாக உலக கோப்பையில் பங்கேற்கும் 16 அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

- Advertisement -

அவர் கூறுகையில், “ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் பாகிஸ்தான் அணியை சந்தித்துக் கொண்டபோது, போட்டி முடிந்த பிறகு எங்களுக்குள் மிகவும் இயல்பான பேச்சு வார்த்தைகளே இருக்கும். சில வீரர்களிடம் உங்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது? குடும்பங்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? உங்களிடம் என்னென்ன கார்கள் இருக்கிறது? உங்கள் ஊரில் எது மிகவும் சிறப்பாக இருக்கும்? என இயல்பான விஷயங்களை மட்டுமே அதிகமாக பேசிக் கொள்வோம். மேலும் சில வீரர்கள் எங்களிடம் வந்து, அன்றைய போட்டியில் நடந்த சில தவறுகள்; அதனை சரி செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் வினவுவார்கள்.

இதை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் செய்து கொண்டிருக்க மாட்டோம், ஆசிய கோப்பை தொடரில், போட்டி முடிந்தபின் போதுமான நேரம் இருந்தது. அப்போது இது எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.” என்றார்.

“நீங்கள் நினைக்கும் அளவைவிட எங்களுக்குள் நிறைய நட்புணர்வு இருப்பதை நாங்கள் உணர்கிறோம்.” என்றும் குறிப்பிட்டார்.