2008ல நாங்க ஜெயிச்சது ரெண்டே மேட்ச்தான் ; அது சிஎஸ்கே மும்பை இன்டியன்ஸ் ; மத்தவங்களை ஏன் ஜெயிக்க முடியலன்னு இப்ப வர தெரியல – ரோகித் சர்மா!

0
573
Rohitsharma

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் காரணமாக நடத்த முடியாமல் தென் ஆப்பிரிக்காவில் வைத்து நடத்தப்பட்டது!

2009 தென்னாபிரிக்காவில் வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது ஐபிஎல் டி20 தொடரை ஆடம் கில்கிறிஸ்ட் கேப்டனாக வழிநடத்திய தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்ற பெயரில் உள்ள அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றிய பொழுது அந்த அணியில் இளம் வீரராக ரோஹித் சர்மா இடம்பெற்று இருந்தார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக ஒரு ஹட்ரிக் விக்கட்டையும் வீழ்த்தி இருந்தார்.

தற்போது ரோகித் சர்மா முதன் முதலில் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற நிகழ்வை நினைவு கூர்ந்து சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறும் பொழுது “அப்பொழுது நாங்கள் எதையும் திட்டமிடவில்லை. நாங்கள் கிரிக்கெட் விளையாடிய விதத்தை மாற்றினோம். எங்களது முதல் போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுக்கு சென்றோம். பலம் மற்றும் பலவீனம் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் எங்களது விளையாட்டுப் பாணி எப்படி பொருந்துகின்றன என்பதைப் பற்றி நன்றாகத் திட்டமிட்டோம். விளையாடிய பிறகு அது சரியாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு புள்ளி பட்டியலில் கடைசியில் இருந்து அதற்கு அடுத்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றோம்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“ஆடம் கில்கிறிஸ்ட் அந்த நேரத்தில் இளம் வீரர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளித்தவர். உங்கள் விளையாட்டை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என நேர்மறையான விஷயங்களை அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார். நிறைய அனுபவங்களை விளையாட்டில் சேகரித்து வைத்திருந்த அவர் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். நாங்கள் 2008 ஆம் ஆண்டு வென்றது சென்னை மற்றும் மும்பை ஆகிய வலிமையான அணிகளை மட்டும்தான். அந்த இரண்டு வெற்றிகளை தவிர மற்ற எந்த அணிகளையும் நாங்கள் வெல்லவில்லை. மற்ற அணிகள் பலம் குறைந்தவை என்று சொல்லவில்லை ஆனால் அவர்கள் சீரான சமநிலையில் இல்லாத இருந்த அணிகள். அந்தத் தோல்விகள் இப்போது வரை புரியவில்லை!” என்று கூறியிருக்கிறார்!