பும்ராவே டீம்ல இல்ல.. நாங்க இந்திய அணியை தோற்கடிக்க செம சான்ஸ்.. ஆனா ஒரு பிரச்சனை – இம்ருல் கேய்ஸ் பேட்டி

0
1194
Kayes

தற்போது இந்திய அணியில் பும்ரா இல்லாத காரணத்தினால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை பங்களாதேஷ் வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக பங்களாதேஷ் வீரர் இம்ருல் கேய்ஸ் கூறியிருக்கிறார்.

இந்தியா பங்களாதேஷ் அணிகள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாய் மைதானத்தில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்திய அணியில் பும்ரா இல்லாதது போல, பங்களாதேஷ் அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு

இந்திய அணியை பொறுத்தவரையில் பும்ரா இல்லாதது மட்டுமே இழப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் அனைவரும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணியில் நல்ல சுழல் பந்துவீச்சாளர்களும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களும் இருப்பது இன்னொரு பலமாக பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் பங்களாதேஷ் அணி பொதுவாகவே பேட்டிங் மற்றும் சுழல் பந்துவீச்சில் பின்தங்கி இருக்கிறது. இந்திய அணிக்கு சமமாக அவர்களிடம் நல்ல வேகப் பந்துவீச்சு இருக்கிறது. உலகின் சிறந்த சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இல்லாததால் அவர்கள் ஒரு சுழல் பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தில் இருப்பது பின்னடைவாகும்.

- Advertisement -

பங்களாதேஷ் வெல்ல நல்ல வாய்ப்பு

இந்த நிலையில் பங்களாதேஷ் அணியின் இம்ருல் கேய்ஸ் கூறும்பொழுது ” இந்தியா சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை உடன் பலமான அணியாக இருக்கிறது. ஆனால் தற்போது அவர்கள் அணியில் பும்ரா இல்லை. அவர் கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணிக்கு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார் என்று நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவர் இல்லாததால் இந்த முறை பங்களாதேஷ் அணி இந்திய அணியை வீழ்த்த ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது”

இதையும் படிங்க : அகர்கருக்கு என்ன பிடிக்கல.. நான் பிஆர் வச்சிக்கவுமில்லை.. ரொம்ப ஏமாத்திட்டாங்க – ரகானே பேட்டி

“அதே சமயத்தில் பங்களாதேஷ் அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது உலகின் சிறந்த ஆல் ரவுண்டரான ஷாகிப் அல்ஹசன் தற்பொழுது இல்லை. அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அவர் அணிக்கு எல்லா வகையிலும் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர். தற்பொழுது அவர் இல்லாததால் அவருடைய இடத்திற்கு ஒரு சுழல் பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. இது பங்களாதேஷ் அணிக்கு ஒரு பின்னடைவாக அமைகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -