பணம் இருக்கும் திமிரில் பிசிசிஐ ஆடுகிறது, பாகிஸ்தானை வேண்டுமென்றே ஐபிஎல் ஆடவிடாமல் செய்கிறது – பாகிஸ்தான் ஜாம்பவான் இம்ரான் கான் சரமாரியாக சாடல்!

0
272

பிசிசிஐ பணம் இருக்கும் திமிரில் பாகிஸ்தான் பிளேயர்களை வேண்டுமென்றே ஐபிஎல் விளையாட விடாமல் தடுக்கிறது என்று சரமாரியாக சாதி உள்ளார் பாகிஸ்தான் அண்ட் லெஜெண்ட் இம்ரான் கான்.

கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்கள் கவனிக்க கூடிய தொடராக ஐபிஎல் இருந்து வருகிறது. மேலும் அதிக வீரர்கள் மற்றும் அதிக பணம் புழங்கும் தொடராகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

15 வருடங்களாக தொடர்ந்து பலராலும் கவனிக்கப்படும் இந்த ஐபிஎல் தொடரில், கிட்டத்தட்ட 10 வருடங்களாக பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாட அனுமதி கொடுக்கப்படுவதில்லை. உள்நாட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய முடிவுகளை பிசிசிஐ எடுத்திருப்பதாக கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த வருடம் 16வது ஐபிஎல் சீசன் கடந்த 31ஆம் தேதி துவங்கியது. துவக்க நாளில் ஐபிஎல் குறித்தும், பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்காத பிசிசிஐ மீதும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் கிரிக்கெட் லெஜெண்ட் இம்ரான் கான்.

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாதது வருத்தம் அளித்தாலும், கிரிக்கெட்டில் இந்தியா நடந்து கொள்வது மிகவும் மோசமாக இருக்கிறது. சூப்பர் பவர் கொண்ட நாடுகளைப் போல நடந்து கொள்கிறது. விளையாட்டில் எதற்க்காக இத்தகைய திமிர்தனம்.

- Advertisement -

கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகளை விட அதிக அளவில் பணம் ஈட்டக் கூடிய வாரியமாக பிசிசிஐ இருப்பதால், மற்ற நாடுகளின் மீது அதிகார திமிருடன் நடந்து கொள்கிறது. இதனால் யார் எங்கே விளையாட வேண்டும்? விளையாட கூடாது? என்பதை முடிவு செய்யும் அதிகார திமிர் மனப்பான்மையையும் கொண்டிருக்கிறது.

அதிக பணம் ஈட்டக்கூடிய, அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஐபிஎல் போன்ற தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களை இத்தனை வருடங்கள் விளையாடவிடாதது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதில் தலையிடுட்டு நியாயம் பேசுவதற்கு எவருக்கும் தைரியம் இல்லை. அதனால் தான் பிசிசிஐ இப்படி நடந்து கொள்கிறது. இது பணம் இருக்கும் மமதையில் ஆடும் செயலாகும்.

எங்கள் நாடுகளில் இளம் வீரர்களை உருவாக்குவதற்கான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன. சிறந்த இளம் வீரர்களும் இருக்கின்றனர். ஆனால் பிசிசிஐ போல பெரியண்ணன் தனத்தை நாங்கள் கடைபிடிக்க மாட்டோம்.” என்று சாடினார் இம்ரான் கான்.