கிரிக்கெட்

பாபர் அசாம் செய்த தவறால் இமாம் உல் ஹக் பரிதாப ரன் அவுட் ; கோபத்தில் பேட்டை தரையில் அடித்த வீடியோ இணைப்பு

வெஸ்ட் இன்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானிற்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு கோவிட் பாதிப்பால் இந்தத் தொடர் தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடத்தப்படுகிறது.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் அணி 305 ரன்கள் குவிக்க, அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசமின் சதத்தாலும், குல்தில் ஷாவின் அதிரடியாலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இன்று இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி முல்தான் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த முறை டாஸில் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

இதன்படி பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை துவங்க பகார் ஜமானும், இமாம் உல் ஹக்கும் களம் புகுந்தனர். அணியின் ஸ்கோர் 25 ரன்களாக இருக்கும் போது, பகார் ஜமான் ஆன்டர்சன் பிலிப் பந்தில் ரொமாரியோ ஷெப்பர் இடம் கேட்ச் கொடுத்து 17 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதை அடுத்து இமாம் உல் ஹக் உடன் கேப்டன் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடுவதுபோல் தெரிந்தாலும், அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்துகொண்டே சென்றது. மிகச்சிறப்பாக விளையாடிய இருவரும் 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு அரைசதமும் அடித்தனர்.

அணியின் ஸ்கோர் 145 ரன்களை எட்டியபோது, அகேல் ஹூசைன் வீசிய ஆட்டத்தின் 27.5 வது பந்தை இமாம் உல் ஹக் லாங்-ஆன் திசையில் நேராகத் தட்டிவிட்டு, பாபர் ஆசமை ரன்னிற்கு அழைத்தபடி ஓடிவர, பாபர் ஆசமோ பந்தை பீல்டர் ஷாய் ஹோப் பிடிக்கிறாரா இல்லையென்று பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் பந்தைப் பிடித்த ஷாய் கோப் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரனிடம் பந்தை அடிக்க, இமாம் உல் ஹக் ரன் அவுட் செய்யப்பட்டு, பரிதாபமாக வெளியேற்றப்பட்டார்.

இந்த ரன்அவுட்டில் தவறு பாபர் ஆசம் உடையதுதான். ஏனென்றால் பந்து நேராக அடிக்கப்பட்டால், அந்த ரன்னிற்கான அழைப்பு பேட்ஸ்மேன் உடையது. இதே பந்து பின்புறம் சென்றால், அதற்கான ரன் அழைப்பு எதிர்முனையில் இருப்பர் உடையது. இந்த ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 275 ரன்களை எட்டு விக்கெட் இழப்பிற்கு எடுத்தது!

Published by