பேட் கம்மின்ஸை அணியை விட்டு வெளியில் உட்கார வைத்துள்ள கொல்கத்தா அணிக்கு அறிவுரை வழங்கியுள்ள யுவராஜ் சிங்

0
121
Yuvraj Singh about Pat Cummins

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 41வது ஆட்டமாக, ரிஷாப்பின் டெல்லி அணியும், ஸ்ரேயாஷின் கொல்கத்தா அணியும், மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இந்தப்போட்டி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பை கொஞ்சம் இறுகப் பற்றிக்கொள்வதற்கான மிக முக்கியமான ஆட்டம். ஆனால் இந்தப் போட்டியில் கொல்கத்தா அடிப்படையிலேயே சில தவறுகளைச் செய்து தோற்றது!

டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் டாஸ் ஜெயித்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணிக்காக முதலில் ஆட்டத்தைத் துவங்க மீண்டும் வெங்கடேஸ் வந்தார். அவருடன் ஆரோன் பின்ச்சும் வந்தார். தைரியமாக ஆடுகிறேன் என்று அனாவசாயமாக பின்ச் கிளீன் போல்டானார். வைடு போயிருக்கக் கூடிய பந்தை அடிக்க போய் வெங்கடேசும் அவுட்டானார். ஆடவந்த எல்லா வீரர்களும் அடிக்க மட்டுமே நினைத்தார்களே தவிர, ஒருவரும் ஆட்டத்தை எடுத்துச் செல்ல நினைக்கவில்லை. இந்தத் தொடர் முழுக்கவே இப்படித்தான் ஆடிவருகிறார்கள். சந்தேகமே இல்லாமல் இது அதிரடி மெக்கல்லமின் தாக்குதல் யுக்திதான் என்று சொல்லலாம். ஆனால் இந்த யுக்தி பெரும்பாலான ஆட்டங்களில் பலிக்காது.

- Advertisement -

ஆட்ட சூழலுக்குத் தகுந்த மாதிரி ஆடுவதில்லை என்பதோடு, அணி தேர்வும் கண்டமேனிக்கு நடக்கிறது. யார் எந்த ஆட்டத்தில் விளையாட போகிறார்கள் என்ற தீர்மானமே இல்லை. மேலும் பேட்டிங் வரிசையிலும் எந்த நிலையான முடிவுகளும் இல்லை. வெங்கடேஷ், பில்லிங்ஸ், நரைன் என்று பெரிய குழப்பமாக இருக்கிறது கொல்கத்தாவின் பேட்டிங் வரிசை. ஏதோ மெக்கல்லம் அணி வீரர்களை வைத்துக் கலைத்துப்போட்டு விளையாடுகிறார் என்றுதான் தோன்றுகிறது!

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் பாட் கம்மின்ஸ் அணியில் எடுக்கப்படவில்லை. இதுக்குறித்து ட்வீட் செய்துள்ள பிரபல இந்திய வீரர் யுவராஜ் சிங் அதில் “பேட் கம்மின்ஸ் வெளியில் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருக்கு காயம் ஏதும் பட்டிருக்கிறதா? உலகத்தரமான ஆல்ரவுண்டர் அவருக்கு இரண்டு மூன்று ஆட்டங்கள் கடினமாக இருந்ததிருக்கிறது என்பதால், மேட்ச் வின்னரை நம்புவதை நிறுத்துவதா? அவர் தொடர்ந்து இரண்டு மூன்று ஆட்டங்களை வென்றும் தருவார். இது என் தனிப்பட்ட கருத்து” என்று கூறியிருக்கிறார்!