“நான் ஒரு மேட்ச்ல தோத்தா போதும்.. இங்க என்ன சொல்லுவாங்கனு தெரியும்!” – ரோகித் சர்மா அதிரடியான தைரியமான பேச்சு!

0
3022
Rohit

நாளை இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் தனது ஏழாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் வென்று இருந்தாலும் கூட, அதிகாரப்பூர்வமாக அரை இறுதிக்கு இன்னும் முழுமையாக தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நடப்பு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாகும்.

இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் இலக்கைத் துரத்தி இரண்டாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. ஆறாவது போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. அது கொஞ்சம் பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம்.

தற்பொழுது இந்திய அணி பேட்டிங் செய்ய கொஞ்சம் சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்தால், போட்டியை எப்படி அணுகி எதிரணிக்கு எந்த மாதிரியான இலக்கை வைக்கும் என்கின்ற கேள்வி தற்போதும் இருந்து வருகிறது.

- Advertisement -

மேலும் மும்பையில் பகல் நேரத்தில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாக இருந்து வருகிறது. எனவே நாளை டாசில் வெற்றி பெறும் எந்த அணியாக இருந்தாலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவே விரும்பும். எனவே இந்திய அணி டாஸ் வெல்வது பல வகைகளில் முக்கியமானது.

இது மட்டும் இல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், உலகக்கோப்பையில் அணியை திறம்பட வழி நடத்துபவராக இருந்தாலும், அவருடைய தகுதியை பொறுப்பெடுத்தாமல் நிறைய விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் சர்மா இது குறித்து கூறும் பொழுது ” நான் ஒரே ஒரு ஆட்டத்தில் தோற்றால் போதும், என்னை மோசமான கேப்டன் என்று சொல்வார்கள்என்பது, எனக்கு மிக நன்றாகவே தெரியும்!” என்று கூறியிருக்கிறார்!