நாளை மறுநாள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என இந்தியத் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
தற்போது இந்தியா வந்திருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.
இந்திய அணி ஆசியா தாண்டி வெளியில் டெஸ்ட் தொடரை விளையாடும் பொழுது ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே இடத்தை இந்தியாவில் விளையாடும் பொழுது சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டருக்கு கொடுக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே அணியில் நிறைய சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக தொடர்ந்து ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை உருவாக்குவதற்காக கம்பீர் இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் நிதீஷ் குமார் ரெட்டியை விளையாட வைக்க வேண்டும் என முடிவு செய்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வைத்தார். தற்போது கம்பீர் இந்த முடிவில் பின்வாங்கி ஒரு வீரரை பிளேயிங் லெவனில் கொண்டுவர இருக்கிறார் என்று தெரிகிறது.
இதுகுறித்து ரியான் டென் டஸ்கேட் கூறும்பொழுது ” நிதீஷ் குமார் ரெட்டி பற்றி நாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்திருந்தோமோ அதில் நாங்கள் மாறவில்லை. ஆனால் இந்த வாரத்தில் அவர் இந்திய பிளேயிங் லெவனில் இடம் பெற மாட்டார். இங்குள்ள சவால்களை வைத்து பார்க்கும் பொழுது இந்த முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது”
“பேட்டிங் ஆழத்தையும் அதே நேரத்தில் சிறப்பு பந்துவீச்சாளர்களையும் சமநிலைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு ஆல் ரவுண்டரை கொண்டு வருவதற்காக ஒரு வீரரை எங்களால் தியாகம் செய்ய முடியாது”
இதையும் படிங்க : அர்ஜுன் டெண்டுல்கரை டிரேடிங் செய்யப் போகும் மும்பை.. எந்த அணிக்கு தெரியுமா? ரசிகர்கள் மகிழ்ச்சி – வெளியான செய்திகள்
“தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் துருவ் ஜுரலை விட்டு விட முடியாது என நினைக்கிறேன். இதற்காக யாரையாவது தவற விட வேண்டும். எளிமையாக சொல்லிவிடுகிறேன் அவர் விளையாடப் போவது உறுதி. ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இணைந்து விளையாடாவிட்டால் நான் உண்மையில் ஆச்சரியப்படுவேன்” என்று கூறி இருக்கிறார்.