ஐபிஎல் தொடரிலும் எனக்கு இதைக் கொடுத்தால் நிச்சயமாக சாதித்துக் காட்டுவேன் – கர்ஜிக்கும் இளம் சிங்கம் சர்பராஸ் கான்

0
577
Sarfaraz Khan

2015 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஒரு சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி நம் அனைவரையும் கவர்ந்தவர் தான் சர்பராஸ் கான். ஒரு சில போட்டிகளில் மட்டும் அதிரடியாக விளையாடிய அவர் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார்.

அப்படியுருந்தும் அவரை 2018ஆம் ஆண்டு பெங்களூரு அணி அவரை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.2018ம் ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி வெறும் 51 ரன்கள் மட்டுமே அவர் குவித்தார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும் பெங்களூரு அணி அவரை தனது அணியில் இருந்து வெளியேற்றியது.

- Advertisement -

2019ஆம் ஆண்டு பஞ்சாப் அணி மூலமாக கைப்பற்றப்பட்டு களமிறங்கி அங்கு அவ்வப்போது வாய்ப்பு கிடைத்த சமயங்களில் விளையாடி வந்தார். பஞ்சாப் அணிக்கு சென்றாலும் அங்கேயும் அவரால் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

20 லட்ச ரூபாய்க்கு சர்ப்ராஸ் கானை கைப்பற்றிய டெல்லி அணி

நடந்து முடிந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி சர்பராஸ் கானை 20 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. தற்பொழுது சர்பராஸ் கான் அதிரடியான பார்மில் உள்ளார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 551 ரன்கள் குவித்திருக்கிறார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 137.45 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்திலும் இவர் இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரிலும் ஒரு நாள் நான் சாதிப்பேன்

சமீபத்தில் பேசியுள்ள சர்பராஸ் கான் “என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு தைரியத்தை யாரேனும் கொடுத்தால் நான் என்னுடைய பணியை சிறப்பாக செய்வேன். கடந்த 4-5 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் என்னுடைய ஆட்டத்தை நான் மேம்படுத்திக் கொண்டு வருகிறேன்.

என்னால் டெஸ்ட் போட்டிகளில் சரிவர விளையாட முடியாது என்று மற்றவர்கள் கூறினாலும் எனக்கு புரிய வாய்ப்பு கிடைக்கும் போது என்னால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதேபோலதான் ஐபிஎல் தொடரிலும் எனக்கான நாள் வரும், அன்று நான் நிச்சயமாக சாதிப்பேன் என்ற நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார்.

பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணியில் தனக்கென தனி முத்திரையை பதிக்க முடியாமல் போனால் சர்பராஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் அதை செய்து காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.